புதிய கொவிட்-19 கிருமி அலையை எதிர்பார்க்கலாம்

மேலும் அதி­க­மா­னோர் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­வ­தா­லும் விழாக்­கா­லம் நெருங்­கு­வ­தா­லும் புதி­ய­தொரு கொவிட்-19 கிருமி அலையை சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­பார்க்க வேண்­டி­யி­ருக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

"வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் செல்­வது அதி­க­ரித்­துள்­ளது. அதோடு கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு வந்­து­கொண்­டி­ருப்­ப­தா­லும் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­துள்­ள­தா­லும் மேலும் அதி­க­மான தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­படும். ஆனால், இது நாம் இதற்­கு­முன் பார்த்­திராத ஒரு சூழல் அல்ல," என்று குறிப்­பிட்­டார் திரு ஓங்.

இவ்­வாண்­டில் மட்­டும் மூன்று கிரு­மித்­தொற்று அலை­களை சிங்­கப்­பூர் சந்­தித்­துள்­ளதை அவர் சுட்­டி­னார். மூன்­றும் பெரி­த­ள­வில் இருந்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

முத­லில் ஓமிக்­ரான் 'பிஏ.2' வகை கிருமி அலை என்­றும் தொடர்ந்து 'பிஏ.5' வகை கிருமி அலை என்­றும் மூன்­றா­வது 'எக்ஸ்­பிபி' வகை கிருமி அலை என்­றும் அவர் நினை­வு­கூர்ந்­தார்.

"அத­னால், புதிய கிருமி அலை வரும்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் 'பிஏ.2' ஓமிக்­ரான் அலை மார்ச் மாதத்­தில் உச்­சத்தை எட்­டி­யது. பின்­னர், அதன் 'பிஏ.5' துணைத் திரிபு கிரு­மி­யால் ஜூன், ஜூலை மாதங்­களில் புதிய தொற்று அலை ஏற்­பட்­டது.

அதை­ய­டுத்து, அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் 'எக்ஸ்­பிபி' கிருமி திரி­பால் ஏற்­பட்ட அலை­யை­யும் சிங்­கப்­பூர் கடந்து வந்­துள்­ளது.

சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம் நேற்று நன்­யாங் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஒரு நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய திரு ஓங் இத்­த­க­வல்­களைத் தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­களில் கொவிட்-19 நில­வ­ரத்­தைக் கண்­கா­ணிப்­பதே முக்­கி­யம் என்­றும் வடக்கே குளிர்­கா­லம் வரும்­போது கவ­லைக்­கு­ரிய புதிய கிருமி திரிபு ஏற்­ப­டு­வது குறித்து கண்­ட­றிய வேண்­டும் என்­றும் அவர் சுட்­டி­னார்.

வரு­கின்ற குளிர்­கா­லத்­தின்­போது முற்­றி­லும் புதிய கொவிட்-19 திரி­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று ஆகஸ்ட் மாதத்­தில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் மருத்­துவ அமைப்பு தெரி­வித்­தி­ருந்­தது.

சீனா­வில் நடப்­ப­தும் நம்மை பாதிக்­கும் என்­றார் திரு ஓங்.

"சீனா அதன் கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­தும்­போது, கூடு­தல் தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­ப­டு­வது நிச்­ச­யம்.

"சீனா­வில் பல­ரும் தொற்­றுக்கு ஆளா­வதை நாம் பார்க்க முடி­கிறது. அத­னால், சீனா­வின் மக்­கள்­தொகை கார­ண­மாக புதிய கிருமி திரி­பு­கள் ஏற்­ப­டு­வது உறுதி," என்­றார் அவர்.

இதன் தொடர்­பில் சிங்­கப்­பூரின் நிலைப்­பாடு குறித்­துக் கேட்­கப்­பட்­ட­தற்கு அவர், "கடந்த ஓராண்­டாக நாம் பின்­பற்­றும் வழி தெளி­வாக உள்­ளது. அதை மக்­கள் கவ­னித்­தி­ருப்­பார்­கள் என்­றும் நம்­பு­கி­றேன். கட்­டுப்­பாடு­களை முடிந்த அள­வுக்­குத் தளர்த்த முயல்­வோம்," என்­றார் அமைச்­சர்.

தற்­போது கொவிட்-19 கட்டுப்­பா­டு­கள் குறைந்­து­விட்­ட­தா­க­வும் மக்­க­ளின் வாழ்க்கை வழக்­க­நிலைக்கு ஓர­ளவு திரும்­பி­விட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 28 நாட்­களில் மொத்­தம் 44,571 புதிய கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!