வழக்கம்போல் கொண்டாட்டம்: பக்தர்கள் மகிழ்ச்சி

அனுஷா செல்­வ­மணி

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு தைப்­பூ­சத் திரு­விழா மீண்­டும் களை­கட்டி இருக்­கிறது.

நேற்­றுக் காலை 5 மணிக்கு தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லில் இருந்து கிளம்­பிய வெள்ளி ரதம், சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் நின்று அன்­னை­யின் ஆசி­பெற்று, பின்­னர் காலை 7.30 மணி­ய­ள­வில் கியோங் செய்க் ரோடு அருள்­மிகு லயன் சித்தி விநா­ய­கர் ஆல­யத்­தைச் சென்று அ­டைந்­தது.

மாலை­வரை அங்கு மக்­கள் அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணிக்கு வழி­பாடு செய்­த­னர். பின்­னர் மாலை 5 மணிக்கு அங்­கி­ருந்து ரதமேறிய முரு­கப்­பெ­ரு­மான், சிசில் ஸ்தி­ரீட், ஹை ஸ்தி­ரீட் வழி­யாக நகர்­வ­லம் வந்து, இரவு தேங் ரோடு கோயிலை வந்­த­டைந்­தார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வெள்ளி ரதத்­து­டன் காவடி­க­ளின் ஊர்­வ­லத்­தை­யும் காண­மு­டிந்­தது பக்­தர்­க­ளுக்­குக் களிப்­பூட்­டி­யது.

எனி­னும், வழக்­கத்­தை­விட வெகு­கு­றை­வாக இவ்­வாண்டு 25 காவ­டி­களே எடுக்­கப்­பட்­டன.

கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கத் தடை­பட்­டி­ருந்த இந்த விம­ரி­சை­யான ரத ஊர்­வலத்­தில், விட்­டு­விட்­டுப் பெய்­த­படியே இருந்த மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் ஏரா­ள­மான பக்­தர்­கள் பங்­கேற்று மகிழ்ந்­தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!