அதிக நடவடிக்கை, தேசிய நடை சவாலில் மாற்றம் மக்களின் உடல் அசைவை அதிகரிக்க சுகாதார மேம்பாட்டு வாரியம் முனைப்பு

இந்த ஆண்­டி­லி­ருந்து அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் நாடா­ளா­விய சமூக இடங்­களில் யோகா, கிக் பாக்­ஸிங் போன்ற உடற்­ப­யிற்­சி­களில் இல­வ­ச­மாக ஈடு­ப­ட­லாம். வாரம்­ தோ­றும் 31,000 பேர் பயன்­பெ­றும் தனது உடல் பயிற்­சித் திட்­டங்­களை கிட்­டத்­தட்ட 47,000 பேர் பயன்­பெ­றும் வகை­யில் உயர்த்த உள்­ளது சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம்.

சிங்­கப்­பூ­ரின் வரு­முன் காக்­கும் முயற்­சி­யான ‘ஹெல்­தி­யர் எஸ்ஜி’ (மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி) திட்­டத்­தின்­கீழ் இதனை வாரி­யம் செயல்­ப­டுத்­து­கிறது.

பிப்­ர­வரி 20ஆம் தேதி முதல் மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் உடல் பயிற்சி வழி­காட்­டு­தல் செயல்­பாட்­டுக்கு வரு­கிறது. அதன்­படி நாள்­தோ­றும் 10 முதல் 30 நிமி­டங்­கள் மித­மான மற்­றும் தீவி­ர­மான உடல் பயிற்­சி­க­ளை­யும் குறைந்­தது 5,000 அடி­க­ளை­யும் மேற்­கொள்ள மக்­கள் ஊக்கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதற்கு ஏற்ப தேசிய நடை சவா­லை­யும் வாரி­யம் மாற்றி அமைக்­கும்.

விளை­யாட்டு மையங்­கள், பூங்­காக்­கள், குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள், முதி­யோர் நட­வ­டிக்கை மையங்­கள் போன்ற சமூக இடங்­களில் வாரி­யத்­தின் பொது மற்­றும் தனி­யார் துறை பங்­கா­ளி­களு­டன் இணைந்து இந்த நட­வடிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன.

2022 ஜூன் மாதம் மாற்­றிய மைக்­கப்­பட்ட தேசிய வழி­காட்­டு­தல் பல்­வேறு செயல்­பா­டு­களில் ஈடு­பட மக்­களை ஊக்­கு­­கிறது.

குறிப்­பாக, வயது வந்­தோ­ருக்­கான உடற்­ப­யிற்சி இலக்கு வரம்பு ஒரு வாரத்­திற்கு 150 நிமி­டங்­கள் முதல் 300 நிமி­டங்கள் வரை மாற்­றப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பயிற்­சிக்­கும் குறைந்­த­பட்ச நேரம் இல்லை. எவ்­வ­ளவு நேரம் செய்­தா­லும் பயன் கிடைப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதற்கு உத­வி­யாக தேசிய நடை சவா­லும் மாற்­றம் செய்­யப் பட்­டுள்­ளது. இதன்­படி, பங்­கேற்­பா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­ மு­றை­யும் குறைந்­த­பட்­சம் 10 நிமி­டங்­க­ளா­வது மித­மான முதல் தீவி­ர­மான உடல் பயிற்­சி­யில் ஈடு­பட வேண்­டும். 20 நிமி­டம் அல்­லது அதற்கு கூடு­த­லான நேர உடற்­ப­யிற்சிக்கு வழங்­கப்­படும் புள்­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைக்­கப்­படும்.

இத்­திட்­டம் உடற் பயிற்­சி­யில் ஈடு­ப­டத் தொடங்­கும் உடல் அசைவே இல்­லா­மல் இருப்­போர் அல்­லது தீவி­ர­மான உடல் பயிற்சிகளை மேற்­கொள்ள முடி­யா­த­வர்­களை ஊக்­கு­விக்­கிறது. ஒரு நாளைக்கு குறைந்­தது 5,000 அடி­கள் நடப்­போ­ருக்கு தொடர்ந்து புள்­ளி­கள் வழங்­கப்­படும். 7,500 மற்­றும் 10,000 அன்றாட அடி­ பதிவுக்கான வெகு­மதி நீக்­கப்­ப­டு­கிறது.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் எந்த நேரத்­தி­லும் பதிவு செய்­யக்­கூ­டிய இந்த சவா­லில் ஜன­வரி மாதம் வரை ஏறக்­கு­றைய 700,000 பேர் பதிவு செய்­துள்­ள­தாக வாரி­யம் குறிப்­பிட்­டது.

மூத்த சுகா­தார நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம், புக்­கிட் பாத்­தோக் ஈஸ்­டில் நேற்று நடந்த நடைப்­ப­யிற்சி சமூக நிகழ்­வில் இந்­தப் புதிய மாற்­றங்­களை அறி­வித்­தார். “வரு­முன் காக்­கும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி வழி­வ­குக்­கும் வகை­யில் அறி­மு­க­மா­கும் அதிக உடற் பயிற்­சித் திட்­டங்­களும் தேசிய நடை சவா­லில் செய்­யப்­பட்­டுள்ள மாற்­றங்­களும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் துடிப்­போடு இருக்­க­வும், மேம்­பட்ட உடல்­ந­லத்­திற்கு தேசிய அள­வில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட உடல் அசைவு நிலையை எட்­ட­வும் தூண்­டும்,” என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

குறிப்பாக, பெரி­யோர் வாரத்­திற்கு குறைந்­தது 150 நிமி­டம் மித­மான மற்­றும் தீவி­ர­மான உடல் செயல்­பா­டு­களில் ஈடுபட பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது. இது அகால மர­ணம், இதய நோய்­, 2வது வகை நீரிழிவு, மன அழுத்­தம், பக்­க­வாதம், உயர் ரத்த அழுத்­தம், பெருங்­கு­டல் புற்­று­நோய், மார்­ப­கப் புற்­று­நோய் போன்­றவை ஏற்­படும் ஆபத்தைக் குறைக்கிறது.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!