தொடர்ந்து அதிகரிக்கும்

தொடர்ந்து அதிகரிக்கும்

3 mins read

கார்களுக்கான 'சிஓஇ' கட்டண உயர்வு குறித்து அமைச்சர் ஈஸ்வரன்

வாகன உரி­மைச் சான்­றி­தழ் ('சிஓஇ') கட்­ட­ணங்­கள் தொடர்ந்து உய­ரு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கப் போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வரன் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­இ­ருக்­கி­றார். அர­சாங்­கம் கார்­களின் எண்­ணிக்கை அறவே அதி­க­ரிக்­கா­ம­லி­ருப்­பதை உறு­தி­செய்­யும் கொள்­கை­யைப் பின்­பற்­று­வ­தும் குடும்ப வரு­மா­னம் உயர்ந்­தி­ருப்­ப­தும் அதற்­குக் கார­ணங்­கள்.

'சிஓஇ' நடை­மு­றை­மீ­தான நாடா­ளு­மன்­றக் கேள்­வி­கள் தொடர்­பில் அமைச்­சர் நிலை அறிக்­கையை வெளி­யிட்டு நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

"அடுத்­து­வ­ரும் ஆண்­டு­களில் குடும்ப வரு­மா­னம் தொடர்ந்து அதி­க­ரிக்­கவே செய்­யும். அர­சாங்­கம் கார்­க­ளின் எண்­ணிக்­கையை நிலை­யாக வைத்­தி­ருக்­கும் கொள்­கை­யைப் பின்­பற்­று­கிறது.

"எனவே நீண்­ட­கால அடிப்­படை­யில் 'சிஓஇ' கட்­ட­ணங்­கள் ஏறு­மு­க­மா­கவே இருக்­கும்," என்­றார் அமைச்­சர்.

சிறிய, பெரிய கார்­க­ளுக்­கான 'சிஓஇ' ஒதுக்­கீ­டு­கள் அதி­க­ரிக்­கும் என்று அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­ட­போ­தும், சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்­துக் கொள்கை பெரிய அள­வில் பொதுப்­போக்­கு­வ­ரத்­தையே முக்­கி­ய­மா­கக் கரு­து­கிறது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். குறை­வான கார்­க­ளைக் கொண்ட வருங்­கா­லத்தை நோக்கி நாடு பய­ணம் செய்­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

'சிஓஇ' கட்­ட­ண­முறை குறித்து 10 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 20க்கு மேற்­பட்ட கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­த­னர்.

'சிஓஇ' கட்­டண உயர்வு, தனி­யார் வாடகை கார் நிறு­வனங்­க­ளின் தாக்­கம் போன்­றவை குறித்து அந்­தக் கேள்­வி­கள் அமைந்­தி­ருந்­தன.

அத்­த­கைய கார்­க­ளின் எண்­ணிக்­கைக்கு உச்ச வரம்பு நிர்­ண­யிக்க இய­லுமா என்­றும் ஒன்­றுக்கு மேற்­பட்ட கார்­களை வைத்­தி­ருக்­கும் குடும்­பங்­கள் அல்­லது வெளி­நாட்­டி­ன­ரால் கார்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளதா என்­றும் கேட்­கப்­பட்­டது.

குழந்­தை­கள், முதி­யோ­ரைக் கொண்ட குடும்­பங்­க­ளுக்­கும் வாழ்­வா­தா­ரத்­துக்கு கார்­களை நம்­பி­யி­ருப்போருக்கும் கார்­கள் தேவை என்­பது குறித்து நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அக்­கறை தெரி­வித்­த­னர்.

அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தமது உரை­யில், "நடந்து செல்­வோர், சைக்­கி­ளோட்­டி­கள், பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வோர் ஆகி­யோ­ருக்கு அர­சாங்­கம் முன்­னு­ரிமை தரும். தனி­யார் கார்­க­ளின் தேவை­யைக் குறைப்­ப­தும் அதன் முன்­னு­ரி­மை­களில் அடங்­கும்," என்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மே, ஜூன், ஜூலை மாதங்­களில், 'ஏ' பிரி­வின்­கீழ் வரும் 1600 சிசிக்­குக் குறை­வான ஆற்­றல்கொண்ட சிறிய ரக கார்­க­ளுக்கு ஒதுக்­கப்­படும் 'சிஓஇ' எண்­ணிக்கை 24 விழுக்­காடு அதி­க­ரிக்­கும். 'பி' பிரி­வின்­கீழ் வரும் அதிக ஆற்­றல் கொண்ட கார்­க­ளுக்கு அது 15 விழுக்­கா­டாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­முறை மட்­டும் இடம்­பெ­றும் நட­வ­டிக்­கை­யாக, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வழங்­கப்­படும் 'சிஓஇ' சான்­றி­தழ்­கள் காலா­வதி ஆன பிறகு அவற்றை வழக்­க­மான 'சிஓஇ' சான்­றி­தழ்­க­ளின் எண்­ணிக்­கை­யு­டன் சேர்க்க நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் திட்­ட­மி­டு­கிறது என்­றார் அமைச்­சர்.

சிறிய கார்­க­ளுக்­கான 'சிஓஇ' கட்­ட­ணம் $100,000ஐயும் பெரிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் $120,000ஐயும் தாண்­டி­யுள்ள வேளை­யில் அந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

ஏற்­கெ­னவே ஐந்து ஆண்டு­க­ளுக்கு மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்ட அல்­லது நீட்­டிக்­கப்­பட்ட 'சிஓஇ' சான்­றி­தழ்­களை மேலும் நீட்­டிக்க இய­லாது. அந்த கார்­க­ளைப் பதிவு நீக்­கம் செய்­ய­வேண்­டி­யது கட்­டா­யம்.

அதன்­மூ­லம் கிடைக்­கும் கூடு­தல் 'சிஓஇ' சான்­றி­தழ்­களின் எண்­ணிக்கை அடுத்­த­சில காலாண்­டு­க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­யப்­படும் என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

ஏறத்­தாழ 6,000 ஐந்­தாண்டு 'சிஓஇ' சான்­றி­தழ்­கள் அவ்­வாறு பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

இம்­மா­தம் முதல் ஜூலை வரை­யி­லான 'சிஓஇ' ஒதுக்­கீடு 9,575ல் இருந்து 10,431க்கு உயர்த்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக அது குறிப்­பிட்­டது.

மேலும் நாடா­ளு­மன்­றச்

செய்தி­கள் 2ஆம் பக்­கம்