மலேசியாவின் சிறந்த ஐந்து நீர்ப்பூங்காக்கள்

வெயிலால் உடம்பு காயும்போது அதற்கு நல்ல இதத்தைத் தருவது ஒரு நல்ல குளியல் அல்லது நீச்சல்.  பக்கத்தில் இருக்கும் மலேசியாவுக்குச் சென்று நீங்கள் இந்த இடங்களில் நீந்தி விளையாடுவதற்கான பூங்காக்கள் உள்ளன.

1.      சன்வே லகூன் 

மலேசியாவின் மிகச் சிறந்த இடங்களில் சன்வே லகூன் ஒன்று.  1990களிலிருந்தே புகழ்பெற்ற நீர்ப்பூங்காவான இந்த இடம், உடல் சூட்டைத் தணிப்பதற்கான சிறந்த இடம். இதில் பல்வேறு நீர் விளையாட்டு அம்சங்கள் இருப்பதால் திகிலையும் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்போரும் திருப்தியடைவர்.

பெட்டாலிங் ஜயா, சிலாங்கூரில்  ‘சன்வே லகூன்’ உள்ளது

2.      கம்பாங் நீர்ப்பூங்கா

பாகாங் மாநிலத்தின் கம்பாங் பகுதியிலுள்ள இந்த நீர்ப்பூங்காவில் திகிலுட்டும் பல்வேறு நீர்ச்சவாரிகள் உள்ளன. இங்கு இரவு நேர நடவடிக்கைகளும் உள்ளன.

3.      லெகோலேண்ட் 

சிறார்களுக்கு  மிகவும்  கவர்ச்சியான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது ஜோகூரிலுள்ள லெகோலேண்ட் நீர்ப்பூங்கா. இங்கே எழுபதுக்கும்  மேற்பட்ட சவாரிகள் உள்ளன.

4.      டேஸா 

உணவு, உல்லாசம், திகில் ஆகியவற்றையெல்லாம் சரிசமமான அளவில் கொண்டுள்ளது கோலாலம்பூரிலுள்ள டேஸா.

5.       கார்னிவல் 

கெடாவிலுள்ள கார்னிவல் நீர்ப்பூங்காவின் சவாரிகளில் நீங்கள் விளையாட விரும்பாவிட்டாலும் அவை கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சராவாக்- சிங்கப்பூர் வர்த்தக கருதரங்கு, 'எக்ஸ்போ'வில் கலந்துகொண்டார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்).
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Aug 2019

சிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு

செந்தோசாவில் உள்ள கடல்வாழ் மீன் காட்சியகம். படம்: செந்தோசா

23 Jun 2019

குறைந்த செலவில் விடுமுறையைக் கழிக்க