சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை

தமிழ்க்கவிதைக்கு நீண்ட மரபு இருக்கிறது. உரைநடை தோற்றத்திற்குப் பின்னான கவிதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சகல விசயங்களையும் அடக்கியிருந்த கவிதை பண்பில் இருந்து பலவற்றை உதறி தன்னைத் தனித்துவமான கலையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அறிவித்தலின் தன்மையில் இருந்து விலகி விலகி கவிதை உணர்தலின் வடிவமாக வந்து நிற்கிறது. வாசகனின் தன்மைக்கேற்ப அக்கவிதை உள்நுழைய அனுமதிக்கிறது.கவிதையோடு வாசகன் திரும்பத் திரும்ப உறவுகொள்வதாலேயே அது தன் வாசலைத் திறந்து அழைத்துச் செல்கிறது. தீவிரமான கவிதை வாசிப்பு இல்லாமல் இது சாத்தியமாவது இல்லை.

கவிதை தரும் பேருணர்ச்சி

கவிமனம் கொண்டோர் கவிதை தரும் பேருணர்ச்சியை உணர்ந்துவிடுகின்றனர். கவிதை எளிமையானதுபோல அமைந்து ஆழமான பொருள்தளத்திற்கும் இட்டுச் செல்லும். மிரட்டும் சொற் களைத் தொட்டு உள்ளேச் செல்லச் செல்ல வெற்று ஆரவாரத் தால் நிற்பதும் தெரியவரும். எனவே கவிதை கவித்துவ மனத்தால் உண்டாவது. தாய்மை கொண்ட சொற்களால் சொல்லத் தெரிந்தவன் கவிஞன் ஆகிறான். வெடிவைத்துச் சொற்களை அள்ளி அடுக்குகிறவன் போலிப் புலவன் ஆகிறான்.

Remote video URL

கவிதையின் வரையறை

இன்னது என்று உறுதியாக வரையறுக்க வரையறுக்க அதன் பிடியிலிருந்து லாவகமாகத் தாண்டி°விடுகிறது. இந்தக் கவி உலகத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து சொல்லிப் பார்க்கலாம். ஒவ்வொரு கவிஞனும் கவி தையின் பொதுப் பண்பிலிருந்த படியே தனித்தன்மையான கற்ப னையின் வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கின்றான். எனவே கவிதை, கவிஞனுக்குக் கவிஞன் தன் வரையறையை மாற்றியும் கொள்கிறது.

கவித்துவப் பார்வை

கவிதை, புனைகதையின் தன்மைக்கு நேரெதிரான ஒன்றாக இருக்கிறது. இந்தச் சமூகத்திடம், மக்களிடம், இயற்கையிடம் ஒளிந் திருக்கும் ஒரு மர்மத்தைக் கண்டு சொல்வதில் தனித் தீவிரம் கொண்டிருப்பதாக இருக்கிறது. கவிஞன் அந்த மர்மத்தைக் கண்டு விண்டெடுப்பதில் தீராத நாட்டம் கொண்டவனாக இருக்கி றான்.

கவிஞன் கண்ணுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பளிச்சென சிமிட்டுவதைக் கண்டதும் அதை மொழியில் கவ்வப் பார்க்கிறான். அது நமக்கு ஒரு புதிய வெளிச் சத்தைத் தருகிறது. 'நீசக்குயிலும் நெருப்புச்சுவைக் குரலில் ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே' என்ற வரிகளில் 'நெருப்புச்சுவை', 'ஆசை ததும்பி' 'அமுதூறப் பாடல்' ஆகிய சொற்கள் பாரதியிடம் உணர்வு பொங்க வெகுஇயல்பாக வந்து சேர்வதைக் கவனிக்கலாம்.

சொற்களுக்கு அப்பால் நீசனுக் குள்ளும் சில மகத்துவங்கள் ததும்பிக் கொண்டிருப்பதைக் காணுகின்ற கண்களைத்தான் கவித்துவப் பார்வை என்கிறோம்.

கவிச்சுடர்

கவிஞன் இயற்கையிடமிருந்து ஒளியை உருவி எடுத்து வைக்கி றான். வாழ்வின் கதியிலிருந்தும் சுடரை அகழ்ந்து வைக்கிறான். கருஞ்சுடரோ ஒளிச்சுடரோ எதுவாகினும் ஒரு காட்சிக்குள் சுடர வைக்கிறான். அன்றாட நிகழ் விலிருந்தோ, படிமத்தின் அடுக்கி லிருந்தோ, இன்னபிற எண்ணற்ற வடிவங்களிலிருந்தோ உண்டாக்குகிறான்.

சிக்கிமுக்கிக் கல்லை படீரென உரசித் தீப்பொறியை உண்டாக்கு வதுபோல கவிஞன் உண்டாக்குகிறான். அதுவரை தெரியாதபடி இருந்த நெருப்புப்பொறி உள்ளே விழித்தபடி இருப்பது தெரியத் தொடங்குகிறது.

குரலற்றவர்களின் குரல்

யதார்த்தத்தின் நிகழ்வைச் சொல்வது கதை என்றால் அந்த நிகழ்வைத் தலைகீழாக்கிவிடும் மாய ஆற்றலை அந்த °நிகழ்வில் வெகுஇயல்பாகப் பொருந்தி விடு வதுதான் கவிதை. கவிதையின் சொற்கள் சொற் களாக மட்டும் இருப்பதில்லை, அவை உயிராகவும் முளைவிடுகின் றன. குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கின்றன. அறத்தின் குரலாக, ஆவேசத்தின் குரலாக, தெய்வத்தின் குர லாக, மீட்சியின் குரலாக, உன்னதத்தின் குரலாக, குரூரத்தின் குரலாக, இயற்கையின் குரலாக ஒலிக்கச் செய்கின்றன. உணர்வு களின் திரட்சியிலிருந்து உருவா கின்றன கவிதைகள்.

யதார்த்த கற்பனை

கவிதை யதார்த்தத்தைச் சொல் வதுபோல பாவனை செய்கிறது. யதார்த்தத்தின் தளத்திலிருந்து கவிதை விநோத உயிரியாக எழுந்து பறக்கிறது. கவிதைக்கு யதார்த்தம் மிக மிக முக்கியம்தான்.அந்த யதார்த்தத்திலிருந்து பிரபஞ்சப் பொதுவான ஓர் உண் மையைக் கண்டு சொல்கிறது. பிரபஞ்சத்தின் நித்திய சுடரை மறைக்கும் திரையிலிருந்து விலகி வந்து பளிச்சென முகம் காட்டு கின்றன.

யதார்த்தத்தின் கோலத்தை கவிஞன் தன் கற்பனையின் வழி வேறொரு காட்சிகளாக மாற்றிவிடு கிறான். அதிசயமான சித்திரமாக கவிதையில் மாற்றிக் காட்டுகிறான். ஊழிக்கூத்தில் 'பாழாம் வெளி யும் பதறிப் போய் மெய்குலைய' என்று வரும் வரியில் வெளியையே பேருருவாக உயிர்பெறவைத்து நடுங்க வைக்க முடிகிறது கவிஞ னால்.

அடங்காத குரல்

எப்போதும் அடிமை மனோபாவத்திற்கு எதிரான கொதிப்பை வெளிப்படுத்தியபடியே இருக்கின் றன. எந்த அதிகாரக் குரலுக்கும் கவிக்குரல் அடங்குவதில்லை. எந்த நிலையிலும் 'விழியின் மணி களில் தீப்பொறி ஏந்தத்' தவறு வதில்லை. கவிதை ஒரு விடுதலை யின் குரலாக இருக்கிறது. நம்மால் கடப்பாரையை ஓங்கிப் போட்டாலும் தெறிக்கவிடும் உருக் கான பாறைதான் அது. ஆனால் அதிலே விழுந்த மரவிதை ஒன்று துளிர்க்கிறது. இந்தக் காட்சியை நாமும் பார்க்கத்தான் செய்கிறோம். இந்த உண்மை அந்தப் பாறை மீது இருக்கிறது.

மானுடத்தின் கவிதை

அதை உரைநடையாளன் பார்க் கும் யதார்த்த நிலையைத்தான் நமக்குச் சொல்லத் தோன்றுகிறது. 'பாருக்கு இடம் கொடாப் பாறை பசுமர வேருக்கு நெகிழ்கிற வேடிக்கை.' பாறை தனக்குள் உயிர்த்துவம் கொண்டு இளகுகிறதாகப் பார்க் கிற இந்த மனத்தைத்தான் கவித்துவம் என்கிறோம். இந்த காட்சி படிமமாக மட்டுமே நிறுத்தாமல் வாழ்விற்கு அர்த்தத் தினைத் தரும் கண்ணியில் இணைக்கிறபோது மானுடத்தின் கவிதையாகிறது.

கவித்துவம்

கவிதை எப்போது கவித்துவம் பெறுகிறது என்றால் வாசகனுக்கு வாசகன் அவர்களது அனுபவத்திற்குள் புகுந்து தனக்குள் ஒரு புதிய வெளிச்சத்தை உண்டாக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும்போது தான். கவிதை யதார்த்தத்திலிருந்து வேறொரு கவிதை யதார்த்தத்தைச் சொல்கிறது என்றோம். அதேபோல வாழ்விலிருந்து உண்மைகளை உருவிப் போட்டபடியே இருக்கிறது. அந்த உண்மைகள் பல சமயம் உக்கிரமான கனல் துண்டுகளாக இருக்கின்றன. குளிர்மை கொண்ட அபூர்வ ஜொலிப்பாக இருக்கின்றன. மூச்சு முட்டும் தத்தளிப்பாக இருக் கின்றன. இந்த மாயங்களைச் செய்வது மொழியின் ஒளியில் தான்.

மொழியின் அழகு

சிலந்தி தன் வாய்ப்பசையில் இருந்து இழையை உருவி உருவி வலை பின்னுவதுபோல கவிஞன் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட வாழ்வின் சாரங்களிலிருந்து மொழியை மீட்டி அந்த உண்மையை பின்னிக் காட்டுகிறான்.

'பழத்தின் அழகைப்

பாராட்டுகிறார்

உள்ளிருந்து குடையும்

வண்டின் குடைச்சலை யார்

அறிவார்'

இது ஒரு அழகிய மாம்பழத் திற்கு நேர்வதை மட்டுமா சொல்கி றது.

ஒரு இளம் விதவையின் மனதைச் சொல்வதாக வாசகன் அறிய நேரும்போது கவிதை வேறொரு பரிமாணத்தைக் காட்டு கிறதல்லவா? இந்த ரசவாதத்தைச் செய்வதுதான் கவிதை.

'ஓடும் நதியைத்

தெப்பக்குளத்தில் தேக்கியது கோயில்

நாறியது நாளடைவில்'

கருத்தியல் ரீதியாக நாம் உண்டாக்கிய உன்னத இடம் கோயில்.

உண்மையில் அந்த உன்னதம் கடவுள் சார்ந்த நம் வாழ்வில் இருக்கிறதா? கோயில் என் றில்லை; காந்தி உண்டாக்கப் பார்த்த உன்னத வாழ்வு அவர் கொள்கைவழி வந்த கட்சிக்கு இருக்கிறதா? பெரியாரின் கொள்கை பெரியார் வழித்தடத்தில் இன்று இருக்கிறதா?

ஒரு சிந்தனை, மானிட எழுச்சி யோடு தொடக்கத்தில் அப்போது தான் வந்தடைந்த நதியின் தன் மையாய் இருக்கிறது. நாளாக நாளாக அது தன் உன்னதத்தை இழந்து நாறுகிறது. கவிஞன் இதைத் தன் கவிதைவழி கண்டடைந்து வைக்கிறான்.

காலத்தைக் கடந்த கவிதை

கவிதை நிகழ்காலத்தை சொன்னாலும் அது எல்லாக் காலத்திற்குமாக மாறிவிடுகிறது. கவிதை புறத்தில் ஒன்றாகவும் அகத்தில் வேறொன்றாகவும் இருக்கிறது. கவிதை எப்போதும் தனக்குள்ளே ஓர் அனுபவத்திற்கு அழைக்கிறது. அந்தக் கவிதையின் அந் தரங்கக் குரலைப் பின்பற்றிச் செல்லும்போது வேறுவிதமான அனுபவங்கள் உண்டாகின்றன. 'மோகனப் பாட்டு முடிவுறப் பாரெங்கும் ஏக மௌனம் இயன்றது காண்' என்கிறான் பாரதி. ஒருவனுக்கு இவ்விரு வரிகள் மகத்தான இசை அனுபவத்திற்குப் பின்னான ஒரு நிசப்தத்தைத் தவழவிடுவதாகத் தோன்றலாம்.தமிழினத்தின் விடிவெள்ளி என்று கொண்டாடிய பிரபாகரனின் மரணத் தருணத்தைச் சொல்வ தைக்கூட என்றோ எழுதிய பாரதி யின் கவிதை இன்னும் பொருந்திப் போகும். கவிதை, காலத்தைக் கடந்து எப்போதும் ஒளிர்வதாக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!