அறிவியல் புனைவும் வரலாற்றுப் புனைவும்

தமிழ் முரசு நாளிதழ் தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து நடத்தும் 'விசை' படைப்பிலக்கியத் திட்டத்தின் ஓர் அங்கமாக சிறு கதைப் பயிலரங்கு இடம் பெற்றது.

தமிழகத்தில் முக்கிய இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் காணப்படும் டாக்டர் சுனில் கிருஷ்ணன், இந்தப் பயிலரங்கில் அறிவியல் புனைவு, வரலாற்றுப் புனைவுகளை எழுது வது பற்றி உதாரண கதைகள், குறிப்புகள் மூலம் விளக்கினார்.

https://www.facebook.com/163335113676864/videos/2358548671045426

புதிய, வளரும் எழுத்தாளர்கள் தங்களது படைப்பாற்றலை வளர்க்க உதவும் நோக்கில் நடத் தப்பட்ட இந்தப் பயிலரங்கில் பங் கேற்ற இளையர்களில் ஒருவரான நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் தகவல் தொழில்நுட்பத் துறையில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவரான 20 வயது கண்ணன் ஹரிஹரன், எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்பது குறித்த நுணுக்கங்களை அறிந்ததாகக் கூறினார். கற்பனை களை எப்படி கதைகளில் புகுத்த லாம் என்பதைக் கற்றுக்கொண்ட தாகவும் அவர் கூறினார்.

கதை எழுதும் ஆர்வம் கொண் டிருக்கும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ்க் கல்வியுடன் கூடிய பாலர் கல்வித் துறையில் படிக்கும் செழியன் நந்தினி, எப்படி அடுத்த கட்டத் திற்குச் செல்வது என்பதை அறிந்துகொள்ள பயிலரங்கில் சேர்ந்தார். பயிலரங்கின் முடிவில் கதை எழுதும் நம்பிக்கை அவ ருக்கு ஏற்பட்டது. "உதாரணத் திற்குக் கதையை முதல் நபர் கண்ணோட்டத்திலிருந்து எழுது வதா அல்லது மூன்றாம் நபர் கண்ணோட்டத்தில் இருந்து எழுதுவதா, பல கண்ணோட்டங் களில் எழுதும்போது எந்த உணர்ச் சிகளை வெளிப்படுத்துவது, தலைப்பு என்னவாக இருக்கலாம் போன்ற உத்திகளையும் கற்றேன்," என்றார் அவர்.

சிறுகதையை அணுகும் முறை களையும் உண்மைக்கும் அனுபவத் திற்கும் உள்ள வித்தியாசத்தை வலியுறுத்தும் வகையிலும் விசை சிறுகதைப் பயிலரங்கு தமக்கு பயனளித்துள்ளது என்று குறிப் பிட்டார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவி ரவீணா சிவகுருநாதன், 21. "நம் எழுத்துப் படைப்புகள் படிப்பவர்களுக்கு நல்ல அனுபவத்தை எப்படி வழங் கலாம் என்பதைப் பற்றி மேலும் அறிந்தேன். இருவழி கலந்துரை யாடலை ஊக்குவிக்கும் காணொ ளிகள், விளையாட்டுகள் போன்ற வற்றை உள்ளடக்குவது இளையர் களுக்கு சுவாரசியத்தை அதிக ரிக்கும்," என்றார் ரவீணா.

அறிவியல் புனைவு

அறிவியல் கருதுகோள்

நல்ல அறிவியல் புனைவிற்கு மிக முக்கிய மானது அது முன்வைக்கும் அறிவியல் கருதுகோள் (hypothesis). சுருக்கமாக 'இப்படி நடந் தால்?' எனும் கேள்வியைப் பின் தொடர்வது. ஒரு இயந்திரத்திற்கு சுயமாக சிந்திக்கும் திறன் இருந் தால் என்னவாகும்? சாமானிய மனிதரிடம் ஒரு கால இயந்திரம் கிடைத்தால் என்ன செய்வான்? ஒரு மனிதன் பிறர் கண்களில் இருந்து மறையும் ஆற்றல் பெற்றால் என்ன செய்வான்? இவை சுவாரசியமான கேள்விகள்.

என்ன, எப்படி நிகழ்கிறது

அறிவியல் புனைவிற்கு என்ன நிகழ்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ அது எப்படி நிகழ் கிறது எனத் தர்க்கப்பூர்வமாக விளக்குவதும் முக்கியம். 'ஃபாண் டசி' அல்லது தேவதை கதை களிலிருந்து இதை வேறுபடுத்தும் அம்சம் இதுவே. ஒரு கால இயந்திரம் எப்படி இருக்கும்? அது எந்த அடிப்படையில் வேலை செய்யும்? அதற்கென உள்ள விதி முறைகள் என்ன? ஐசக் அசிமோவின் இயந்திர மனி தர்கள் பற்றிய மூன்று விதிமுறை கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

1. ஒரு ரோபோ ஒருபோதும் மனி தனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. அல்லது அவசியமான நேரங்களில் செயல்படாமல் இருந்து மனிதன் பாதிப்புக்கு உள்ளாவதை அனு மதிக்கக்கூடாது.

2. மனிதர்களின் ஆணையை ஒரு ரோபோ நிறைவேற்ற வேண்டும். விதிவிலக்கு, அத்தகைய ஆணைகள் முதல் விதியுடன் முரண்படும்போது.

3. முதல் மட்டும் இரண்டாம் விதி களோடு முரண்படாத வரையில் ஒரு ரோபோ தன்னைத்தானே தற் காத்துக்கொள்ள வேண்டும். இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி ஒவ்வோர் அறிவியல் புனைவிற்கும் உள்ளார்ந்த தர்க்கம் உண்டு.

கற்பனை

பொதுவாகவே கதைகளுக்குக் கற்பனை இன்றியமையாதது, அதிலும் அறிவியல் புனைவின் வலு என்பது அதன் கட்டற்ற கற்பனைச் சாத்தியத்தில் இருந்து எழுகிறது. ஓர் அந்நிய கிரகத்தை, அந்நிய உயிரைக் கற்பனையில் சித்திரிக்க வேண்டும்.

உணர்வு பிணைப்பு

அற்புதமான யோசனைகளைப் பின் தொடர்ந்து கதைகளைப் படைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அத்திசையில் செல்லும் போது வெறும் வறட்டு யோசனைகளின் குவியலாக கதை சுருங்கிவிடும் ஆபத்தும் உண்டு. ஒரு கதையும் அதன் பாத்திரங்களும் வாசகரு டன் உணர்வு ரீதியாக உறவு கொள்ள வேண்டும். அவர்களின் தயக்கங் களும் அற சிக்கல்களும் வாசகர் மனதில் வேர் கொண்டு வளர வேண்டும்.

அசல்தன்மை

அறிவியல் புனைவின் தனித் தன்மை என்பது அதன் கருது கோளில் மட்டும் கற்பனையில் அசல்தன்மை உள்ளதா என்பதை பொறுத்ததே. இத்தனை ஆண்டு களில் ஆயிரக்கணக்கான அறி வியல் கதைகள் வெளியாகியுள்ளன. எத்தனை விதமான அந்நியர் கள் கற்பனை செய்யப்பட்டு இருப் பார்கள்! அவற்றை எல்லாம் கடந்து தனித்தன்மையோடு புதி தாக, அசலாக ஒன்றை உருவாக்க முனைய வேண்டும்.

விந்தைதன்மை

அறிவியல் புனைவின் பொது இலக்கணம் என ஒன்றைச் சொல் லலாம் என்றால் அது வாசகருக்கு 'விந்தை' உணர்வை கடத்த வேண்டும். நிலப்பரப்பில் இருந்து அனைத்துமே வாசகருக்கு உள அளவில் ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துவது அறிவியல் புனைவு களில் அனுமதிக்கப்படுகிறது.

வரலாற்றுப் புனைவு

தரவுகளைச் சேகரிக்க வேண்டும்

ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்படும்போதே வரலாற்று புனைவின் இடம் வலுவடைகிறது. எத்தனைக்கு எத்தனை தரவுகள் வலுவாக உள்ளனவோ அத்த னைக்கு அத்தனை வரலாற்று கதைகளின் நம்பகத்தன்மை அதி கரிக்கும். எழுத்து ஆவணங்கள் அளவிற்கே வாய்மொழி வரலாறும் முக்கியம் வாய்ந்ததே.

இடைவெளிகளை ஊகிக்க வேண்டும்

ஆவணங்களின் தொகுப்பு வர லாற்றுப் புனைக்கதை ஆகாது. தரவுகளின் இடைவெளி வழியாக ஒரு கதையைச் சொல்ல முடிய வேண்டும். ஒரு முக்கியமான வர லாற்று திருப்புமுனை முடிவு எளிய வடிவில் எப்படி கருக்கொண்டி ருக்கும் என்பதை கற்பனையில் உருவாக்க முயல வேண்டும்.

புறத் தகவல்கள் வரலாற்று அடிப்படையில் இருக்க வேண்டும்

1984 ஆம் ஆண்டு நிகழ்வதாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்த இரண்டாம் பத்தியில் கைத்தொலை பேசியை நாயகன் பார்த்தான் என எழுதக்கூடாது. கதை நிகழும் காலத்தின் புற தகவல்கள் முடிந்த வரை நம்பகத்துடன் உருவாக்க வேண்டும். கற்கால கதையில் இரும்புப் பற்றிய குறிப்பு வந்து விடக்கூடாது. வீட்டு அமைப்பு, நீர் நிலை என எல்லாவற்றைப் பற்றிய துல்லிய அறிவு வேண்டும்.

மனநிலை கற்பனைச் சார்ந்தது

வரலாறுப் புற தகவல்களை அளிக் கும். விளைவுகளைச் சொல்லும். ஆனால் அகக் கணக்குகள் அதற்கு பிடிபடாது. வரலாற்று முடிவை வந்தடைந்த பாதியைப் படிமங்கள் வழியாக சொல்ல முயல்வது ஒரு சிறந்த உத்தி. எழுத்தாளரின் கற்பனைத்திறன் செயல்பட வேண்டும்.

பல குரல் தன்மை

பல கோணங்களில் இருந்து ஒரு வரலாற்று நிகழ்வை அணுகும் போது இயல்பாக சமநிலைக் கைக்கூடும். மறு தரப்பிற்கான இடமும் அளிக்கப்பட வேண்டும். கதையைப் பல அடுக்குகள் கொண்டதாக இது ஆக்கும்.

முன்முடிவுகள் கூடாது

வரலாற்று எழுத்தில் ஒரு போதும் முன் முடிவுகளைக் கதை யாக்கக்கூடாது. எழுத்தாளனுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு. ஆகவே வரலாற்றுப் புனைவைப் பயன்படுத்தி ஒற்றைப்படைத் தன்மையோடு ஒரு கதையைச் சொல்லக்கூடாது. கலை வெறுப்பை வலுவாக்க பயன்படுத்தக்கூடாது.

சிறுகதை எழுதுவதற்கான குறிப்புகள்: சுனில் கிருஷ்ணன்

கதைகள் என்ன செய்யும்?

* வாழ்க்கையை அறிதல்

நம்பிக்கைகளைக் கேள்விக்கு

உள்ளாக்கும்

நிகர் வாழ்வை வாழச் செய்யும்

மகத்தான ஒன்றிற்கு முன் பணியச்

செய்யும்

கதைகளை ஏன் எழுத வேண்டும்?

* விழுமியங்களை நிறுத்த

விழுமியங்களை உடைக்க

நினைவுகளையும் அனுபவங்களை யும் காலாதீதமாக கடத்த

அதிகாரங்களை பேண

அதிகாரங்களை உடைக்க

வாழ்க்கையைச் சுவாரசியமாக்க

வாழ்க்கையைக் கடக்க

சிறுகதை என்பது யாதெனில்?

* சிறிய கதையா?

பக்க அளவு? வார்த்தை அளவு?

நவீனத்துவத்தின் கலை வடிவம்

எடுப்பு தொடுப்பு முடிப்பு

முடிவிலிருந்து துவங்குகிறது

செறிவான சொற்கட்டு

குறுகிய காலம், ஒற்றைப் படிமம்,

குறைந்த அளவிலான பாத்திரங்கள்

சில விதிமுறைகள்

* விவரணைகள் தேவையான

அளவிற்கு மட்டுமே இருக்க

வேண்டும்.

அதீத நாடகீயமாக உணர்வுகளை

வலிந்து திணிக்கக்கூடாது.

உணர்வுகளைக் கதை காட்டாமல்

உணர்த்த வேண்டும். அப்படி

உணர்த்தும் தோறும் கதை

செறிவாகும்.


சிறுகதை சமைக்க தேவையான பொருட்கள்

கதை சொல்லி

கரு

தலைப்பு

சொல்முறை

படிமம்

உரையாடல்

விவரணை

தரிசனம் - கண்டடைதல்

அசல் தன்மை

நுண்மை

சில எச்சரிக்கைகள்

பொறுமை

மறுவாசிப்பு/திருத்தம்

அதிர்ச்சி மதிப்பீடு கூடாது

கதை போக்கிலிருந்து எதிர்பாரா

திருப்பத்தை அளிக்க கூடாது

மெல்லிய முரண்கள் கதைகள் அல்ல

அனுபவத்தை கதையாக்கும் கலை

கற்பனையின் முக்கியத்துவம்

நினைவேக்கங்கள்/நினைவுகள் கதையாகாது.

வாசிப்பே ஆசான்

மொழி

இலக்கணத்தை அறிந்த பின் மீறுவது கலைப்பயணத்தின் ஒரு பகுதி.

அல்லாதபோது விதிமுறைகளை அறியாதவர் என்றே கருதப்படும்.

தமிழில் வளமான சிறுகதை மரபு.

இதில் புதிய சிறுகதையை எழுதுவது அசலான சவால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!