சுடச் சுடச் செய்திகள்

விசை 2.0 படைப்பிலக்கியப் பயிலரங்கு

 வளரும் இலக்கிய தலைமுறையின ரின் எழுத்தாற்றலை வளர்க்க அமைக்கப்பட்டுள்ள களம் விசை. 

கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என பல்வேறு பரிமாணங்களில் முத் திரை பதித்துவரும் சரவண கார்த்திகேயன்  சிறுகதைப் பயிலரங்கை நடத்துவார். 

சாகசம், குற்றப் பின்னணிக் கதைகள் எழுதுவது குறித்து இந்தப் பயிலரங்கில் அறிந்து கொள்ளலாம்.

கவிதை, சிறுகதை கட்டுரைத் துறைகளில் பிரபலமாகத் திகழ் வதுடன் திரைக்கதை எழுத்து, பட இயக்கத்திலும் பெயர் பெற்று வரும் சாம்ராஜ் கவிதைப் பயி லரங்கை நடத்துவார்.

புதிய, வளரும் எழுத்தாளர் களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் செயல்படும் இத்திட் டத்தையொட்டி மே மாதம் இரு பயிலரங்குகள்  நடத்தப்பட்டன.

மே 4ஆம் தேதி எழுத்தாளரும் கல்வியாளருமான பேராசிரியர் சு.வேணுகோபால் கவிதைப் பயில ரங்கை வழிநடத்தினார். 

மே 11ஆம் தேதி நடந்த சிறு கதை பயிலரங்கை எழுத்தாளர் டாக்டர் சுனில் கிருஷ்ணன் நடத் தினார்.

அறிவியல் புனைகதை, வர லாற்றுக் கதை எழுதுவது குறித்து அவர் விளக்கினார். 

இந்தப் பயிலரங்குகளில் அனுப வமுள்ள எழுத்தாளர்களும் எழு தும் ஆர்வம் உள்ளவர்களும் பங் கேற்றுப் பயன்பெற்றனர்.

பயிலரங்குகள்

சிறுகதை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள 16 வயதுக்கு மேற் பட்டவர்கள் இந்தப் பயிலரங்கு களில் பங்கேற்கலாம்.

கட்டணம் மாணவருக்கு: $10, பெரியவருக்கு: $15. காலை, மதிய உணவு வழங்கப்படும்.

கவிதைப் பயிலரங்கில் பங்கேற் பவர்கள் கவிதைகளை அனுப்ப வேண்டும். சிறுகதை பயிலரங்கில் ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் எழுதிய சிறுகதை அல்லது சிறு கதைக்கான குறிப்பை அனுப்பலாம். 

ஒருவர் இரு பயிலரங்குகளிலும் பங்கேற்கலாம். எனினும் இரண்டுக் கும் படைப்புகளை அனுப்ப வேண் டும்.

வழிநடத்துபவர்கள் பங்கேற் போரின் படைப்புகள் குறித்து பேசுவதுடன் அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கும் வழிகாட்டுவார்கள். 

பதிவுக்கு tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், தொடர்பு எண் போன்ற விவரங்களுடன் படைப்புகளையும் அனுப்பி வையுங்கள். 

பயிலரங்கு குறித்த விவரங் களை https://www.tamilmurasu.com.sg/visai-workshop என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

சி.சரவணகார்த்திகேயன்

சி.சரவணகார்த்திகேயன் சுஜாதா விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு போன்ற பல விருதுகள் பெற்ற  எழுத்தாளர். 13 வயதில் எழுத ஆரம்பித்து சிறுகதை, கவிதை, கட்டுரைகள் பல துறை களில் தடம் பதித்து வருபவர். 

Property field_caption_text
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு போன்ற பல விருதுகள் பெற்ற எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன்

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அடிப்படை யாகக் கொண்ட இவரது முதல் நாவலாகிய‌ ‘ஆப்பிளுக்குமுன்’  2017ல் வெளியானது. 

இதிகாசம், வரலாறு, அறிவியல், காமம் எனப் பல தளங்களில் இவரெழுதிய பரிசோதனை முயற்சியான சிறுகதைகள் ‘இறுதி இரவு’ தொகுப்பில் (2016) இடம் பெற்றுள்ளன. கடந்த ஓராண்டில் இவரெழுதிய ஆண்- பெண் உறவுச் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகள் புதிய தொகுப்பான ‘மியாவ்’ என்ற நூலில் இருக்கின்றன (2018).

மேலும் 96: தனிப்பெருங்காதல் (திரைப்படம்), ஆகாயம் கனவு அப்துல் கலாம் (அறிவியல்), வெட்கம் விட்டுப் பேசலாம் (வரலாறு), குஜராத் 2002 கலவரம் (வரலாறு), சந்திரயான் (அறிவியல்), ஐ லவ் யூ மிஷ்கின் (திரைப்படம்), கிட்டத்தட்ட கடவுள் (அறிவியல்), தேவதை புராணம் (கவிதை), பரத்தை கூற்று (கவிதை) என இதுவரையில் 15 நூல்களை எழுதியுள்ளார்.

‘தமிழ்’ (காலாண்டிதழ்) எனும் மின்னிதழையும் நடத்தி வரும் சரவணகார்த்திகேயன்,  சேர நன்னாட்டிளம் பெண்கள், பிரியத் தின் துன்பியல், கமல் ஹாசனின் அரசியல் ஆகிய மின்னூல்களையும் (Amazon KDP) வெளியிட்டுள்ளார். 

கோவை சிங்காநல்லூரில் பிறந்த 35 வயது இளையரான இவர் மென்பொறியாளராக‌ப் பணியாற்றுகிறார்.

மதுமிதா சில குறிப்புகள் என்ற குறும்படத்திற்கு கதை எழுதியிருக் கும் இவர், PS அர்ஜுன் இயக்கும் தமிழ் / மலையாளப் படத்திற்கு (JANANAM) திரைக்கதை, வசனம், பாடல் எழுதியுள்ளார். மேலும் சில படங்களுக்கும் திரைக் கதை, வசனம், பாடல்கள் எழுதி வருகிறார்.

சாம்ராஜ்

மதுரையைச் சேர்ந்தவர் சாம்ராஜ். 47 வயதாகும் இவர் இளவயதிலிருந்தே கவிதை, கதை, கட்டுரை என்று பல தளங்களில் எழுதி வருபவர். 

Property field_caption_text
இளவயதிலிருந்தே கவிதை, கதை, கட்டுரை என்று பல தளங்களில் எழுதி வருபவர் சாம்ராஜ்.

அத்துடன் சிறுபத்திரிகை, திரைப்படத் துறைகளிலும் ஈடுபாடுள்ள இவர், இணை இயக்கு நராக இருக்கிறார்.

பட்டாளத்து வீடு என்ற இவரது சிறுகதை தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ ராஜமார்த்தாண்டன் கவிதை விருதைப் பெற்றது. ‘ஜார் ஒழிக’ (சிறுகதை தொகுப்பு), ‘நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன்’ (கட்டுரைகள்),  ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.  நீண்ட பயணங்கள், சுற்றுச்சூழல், பண்பாடு, மொழி குறித்தான ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர். 

அனுபவமிக்க படைப்பாளரான திரு சாம்ராஜ் தமிழ்ப் படைப்பிலக்கிய இலக்கிய உலகத்தில் நன்கு அறிமுகமானவர்.

ஜூலை 6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறுகதை, கவிதைப் பயிலரங்குகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொடர்பு விவரங்களுடன் tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் 30.6.2019 தேதிக்கு முன்னர் பதிவு செய்யவும். படைப்புகளையும் மறவாமல் அனுப்பி வைக்கவும்.

நாள்: ஜூலை 6, சிறுகதை பயிலரங்கு

           ஜூலை 20, கவிதை பயிலரங்கு

நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: 1000 தோ பாயோ நார்த், நியூஸ் சென்டர், எஸ்பிஹெச் 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon