ஆச்சரியம் ஆனால் உண்மை: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

பிரசவத்தில் ஒரு பிள்ளை பிறந்தால் அது வழக்கம், மூன்று குழந்தைகள் பிறந்தால் அது அரிது.

மாலியில் 25 வயது பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஹலிமா சீசேய் என்று அழைக்கப்படும் இப்பெண் கடந்த மார்ச் மாதம் மாலியின் தலைநகரத்திலிருந்து மொரொக்கோ நாட்டின் மருத்துவமனையில் பிள்ளை பிரசவிப்புக்காக வந்திருந்தார்.

ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், இவர் ஏழு குழந்தைகள் பிரசவிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது.

ஆனால் கடந்த மே 4ஆம் தேதி, சிசேரியன் முறையில் நடந்த பிரசவத்தில் 9 பிள்ளைகளை பெற்றெடுத்து, உலக சாதனையையும் ஹலிமா ஏற்படுத்தியுள்ளார் என நம்பப்படுகிறது.

மாலியின் சுகாதார அமைச்சு, அதன் அறிக்கையில் 5 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஹலிமா பெற்றெடுத்துள்ளார் என்றும் தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

தற்போதைய உலக சாதனைப்படி, 2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடியா சுலேமான் என்பவர் 8 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!