பிலிப்பீன்ஸ்:படசெய்தியாளர் மீது துப்பாக்கிசூடு

பிலிப்பீன்ஸ்:படசெய்தியாளர் மீது துப்பாக்கிசூடு

1 mins read
03e5f762-7cf1-448e-9513-b08a82f0dc9b
படம்: - தமிழ்முரசு

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகரான மணிலாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் படசெய்தியாளர், அவருடைய மகன், தம்பி உட்பட ஐவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது. துப்பாக்கிகாரர்கள் மறைந்திருந்து அவர்களை சுட்டதாக பிலிப்பீன்ஸ் காவல்துறை தெரிவித்தது.

மணிலாவைத் தளமாக கொண்ட ‘டேப்லாய்டு ரீமேட்டின்’ படசெய்தியாளரான ஜோசுவா அபியாட் காரில் தனது குடும்பதினருடன் வந்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கிகாரர்களால் சுடப்பட்டார். இதில் அவருடையக் கையில் குண்டு பாய்ந்தது என அம்மாவட்ட காவல்துறை ஆணையரான நிக்கோலஸ் டோரே கூறினார்.

அபியாட்டும் அவருடைய குடும்பத்தினரும் பிலிப்பீன்ஸ் தலைநகரான மணிலாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

சட்டவிரோதமாகபோதைப்பொருட்கள் பயன்படுத்தி ஏழு வயது சிறுவன் பலியானதை அபியாட்டு ஆவணப்படுத்தினார். அந்த சிறுவன் இறப்பில் தொடர்புடையவர்களைக் காவல்துறை இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தேகிப்பதாக திரு.டோரே மணிலா வானொலி நிலையமான டிடபிள்யூபிஎம்-க்கு நேர்காணலின் போது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்