எரிபொருளைச் சேமிக்க விமானப் பயணத்தைத் தவிர்க்கவும்: ஐஇஏ

எரிபொருளைச் சேமிக்க விமானப் பயணத்தைத் தவிர்க்கவும்: ஐஇஏ

1 mins read
மாற்றுப் போக்குவரத்து இருக்கும்வரை விமானப் பயணத்தைத் தவிர்க்கும்படி அனைத்துலக எரிபொருள் அமைப்பு பரிந்துரைத்துள்ளது
fb7ffc3b-c45f-482d-9131-ccc342a68868
எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்திய மத்திய கிழக்குப் போர், உலகில் பணவீக்கத்தையும் தூண்டிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரால் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்க, அனைத்துலக எரிபொருள் அமைப்பு (IEA) அதன் இருப்பில் உள்ள எண்ணெய்யை முன்னெப்போதும் இல்லாத அளவில் விடுவித்தது.

அதன் தொடர் நடவடிக்கையாக விமானப் பயணத்தைத் தவிர்க்கவும் மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) பரிந்துரைத்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்திய மத்திய கிழக்குப் போர், உலகில் பணவீக்கத்தையும் தூண்டிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

அமைப்பின் பரிந்துரை அரசாங்கங்கள், வர்த்தகங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் கருத்தில்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எரிபொருள் ஏற்றத்தை தணிக்க முடியும் என்று அமைப்பு எதிர்பார்க்கிறது.

இல்லங்களில் இருந்தபடி பணியாற்றுதல், சாலைகளில் குறைந்தது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை வாகனங்கள் கடைப்பிடித்தல், மாற்றுப் போக்குவரத்து இருக்கும்வரை விமானப் பயணத்தைத் தவிர்த்தல் போன்ற பல பரிந்துரைகள் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாரச் 11ஆம் தேதி, எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க அனைத்துலக எரிபொருள் அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை விடுவித்தது. அவற்றில் அமெரிக்கா அதிக அளவு பங்கெடுத்தது.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்விலைபணவீக்கம்எரிபொருள்