மறைந்த எலிசபெத் அரசியாரைக் கொல்ல திட்டமிட்ட இந்திய ஆடவர்

மறைந்த பிரிட்டிஷ் அரசியாரைக் கொல்ல திட்டமிட்ட குற்றத்திற்காக இந்திய ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய சீக்கிய வம்சாவளி எனத் தன்னை கூறிக்கொள்ளும் ஜஸ்வந்த் சிங், 2021ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று எலிசபெத் அரசியாரைக் கொல்ல திட்டமிட்டிருந்தார். ஆயுதம் ஒன்றுடன் வின்சோர் அரண்மனையில் அவர் அத்துமீறி நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டார். அவருக்கு எதிராக இராஜத் துரோகக் குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

1919ஆம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் நகரில்  ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நடந்தது. இதில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்கு பழி வாங்க ராணியைக் கொல்ல ஜஸ்வந்த் திட்டமிட்டுள்ளார். 

21 வயதான ஜஸ்வந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராஜத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதல் நபர் ஜஸ்வந்த்.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!