‘ஸ்டார் அலையன்ஸ்’ கூட்டமைப்புக்குப் புதிய தலைவர்

1 mins read
2f8f5462-d2cd-43d8-9da1-906115c2a689
‘ஸ்டார் அலையன்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி தியோ பெனேகியோதொலியஸ் (இடது), புதிய தலைவர் மைக்கல் ரூசோ. - படம்: ஸ்டார் அலையன்ஸ்

ஏர் கனடாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கல் ரூசோ, ‘ஸ்டார் அலையனஸ்’ தலைமை நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அந்தப் பதவியை வகித்த ‘யுனைடெட்’ன் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்காட் கர்பியின் பணியை அவர் தொடர்வார்.

தலைவர் பதவியை ஏற்கும் திரு ரூசோ, “சுமுகமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் நமது பணியைத் தொடர, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிர்வாகக் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்,” என்று கூறினார்.

உலகின் ஆகப் பெரிய விமான நிறுவனக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகக் குழுத் தலைவராக, திரு ரூசோ ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு நிர்வாகக் குழுக் கூட்டங்களை வழிநடத்துவார்.

அதோடு, நிர்வாகக் குழுவின் பேச்சாளராகவும் அவர் இருப்பார்.

திரு ரூசோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ‘ஸ்டார் அலையன்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி தியோ பெனேகியோதொலியஸ், “மைக்கல் ருசோவை வரவேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்