ஜப்பானில் தொலைத்தொடர்புச் சேவை பாதிப்பைத் தவிர்க்க புதிய முயற்சி

ஜப்பானில் தொலைத்தொடர்புச் சேவை பாதிப்பைத் தவிர்க்க புதிய முயற்சி

1 mins read
e3680d8a-478f-4193-a8b5-032035b396ed
‘ஜப்பான் ரோமிங்’ திட்டத்தில் என்டிடி டோகோமோ, கேடிடிஐ, சாஃப்ட் பேங்க்,ரக்குட்டீன் மொபைல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. - படம்: புளூம்ஸ்பெர்க்
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானில் கைப்பேசிச் சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளன.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டாலும், வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடந்த 2022ஆம் ஆண்டு கேடிடிஐ நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறு, தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை நூறாயிரக்கணக்கான ஜப்பானிய மக்களைப் பாதித்தன.

அத்தகைய எதிர்பாரா சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க, ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து ‘ஜப்பான் ரோமிங்’ என்ற அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளன.

அந்த முன்னோடித் திட்டத்தில் என்டிடி டோகோமோ, கேடிடிஐ, சாஃப்ட்பேங்க், ரக்குட்டீன் மொபைல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பேரிடர்கள், கருவிக் கோளாறுகள் அல்லது இதர அவசரகால நடவடிக்கைகளால் ஒரு நிறுவனத்தின் சேவை தடைபடும்போது, அதன் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக மற்ற நிறுவனங்களின் தகவல் தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவைத் தடங்களின் தீவிரத்தைப் பொறுத்து அந்த ‘ஜப்பான் ரோமிங்’ சேவை இரு முறைகளில் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்