காய்கறி, பழங்களுக்கு ‘ஜிஎஸ்டி’ விலக்கு அளிக்க உறுதி

காய்கறி, பழங்களுக்கு ‘ஜிஎஸ்டி’ விலக்கு அளிக்க உறுதி

1 mins read
737f05dc-c863-469c-b09c-c5cd5535e5d0
நியூசிலாந்தில் ஏப்ரல் மாதம் காய்கறி, பழங்களின் விலை 22.5 விழுக்காடு உயர்ந்ததை அடுத்து உணவு விலைப் பணவீக்க விகிதம் 12.5 விழுக்காடு எனும் உச்சத்தை எட்டியது. - படம்: அன்ஸ்பிளேஷ்

வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆளும் தொழிற்கட்சி, அக்டோபர் மாதத் தேர்தலில் வெற்றிபெற்றால் காய்கறி, பழங்களுக்கு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)யில் இருந்து விலக்கு அளிக்க உறுதியளித்துள்ளது.

பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் வெலிங்டனில் கட்சியின் வரிக் கொள்கையை வெளியிட்டுப் பேசும்போது இவ்வாறு கூறினார்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உயர்த்த அவர் உறுதிகூறினார். அச்சலுகைகள் 2026ஆம் ஆண்டு முழுமையாக அமலுக்கு வரும்போது, 175,000 குடும்பங்கள் பலனடையும். சராசரியாக வாரத்திற்கு 47 நியூசிலாந்து டாலர் ($38) தொகையை அவை பெற்றுக்கொள்ளும்.

நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கருத்துக் கணிப்புகளில் ஆளும் தொழிற்கட்சியைக் காட்டிலும் முன்னணியில் இருக்கும் தேதியக் கட்சி வரிக் குறைப்பிற்கு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், ஆளுங்கட்சி அறிவித்துள்ள காய்கறி, பழங்களுக்கான ஜிஎஸ்டி விலக்கால் நியூசிலாந்துக் குடும்பங்கள் மாதத்திற்கு 18 நியூசிலாந்து டாலரைச் சேமிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்