ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய சீனா: பிலிப்பீன்ஸ் குற்றச்சாட்டு

ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய சீனா: பிலிப்பீன்ஸ் குற்றச்சாட்டு

2 mins read
7efc61b2-8031-4e7c-a702-5e3b09cc693e
பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படை வெளியிட்ட இந்தப் படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியான காணொளிக் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.படத்தில் சீனா பிலிப்பீன்ஸ் நாட்டு மீன்வளத் துறை அலுவலக விமானத்தின் மீது ஒளிக்கதிர்களை பாய்ச்சியது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மணிலா: தென்சீனக் கடலில் தனது விமானங்களில் ஒன்றின் மீது சீனா இம்மாதம் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சியதாகப் பிலிப்பீன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதனால், சீனா, பிலிப்பீன்சுக்கு இடையே கடலில் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இது அமெரிக்காவையும் உள்ளிழுத்து ஆயுதங்கள் ஏந்திய போராட்டத்துக்கு வழிகோலியுள்ளது. அதனால் பிலிப்பீன்சின் நட்பு நாடான அமெரிக்காவையும் இப்பிரச்சினை வட்டாரப் போர் ஒன்றில் இழுக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

அந்தக் கடல் பகுதியில் பிலிப்பீன்சின் மீன்வளத் துறை அலுவலகத்தின் விமானம் ஒன்று அப்பகுதியில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டபோது சீன விமானம் ஒன்று பொறுப்பற்ற, ஆபத்தான நடவடிக்கைளில் ஈடுபட்டதாக பிலிப்பீன்ஸ் கூறியது.

எவ்விதக் காரணமும் இல்லாமல் பிலிப்பீன்ஸ் நாட்டு விமானத்துக்கு மிக அருகில் பல ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டதாக பிலிப்பீன்ஸ் தெரிவித்தது.

இதேபோல் ஆகஸ்ட் 22ஆம் தேதியிலும் தனது சுற்றுக்காவல் விமானத்துக்கு மிக அருகில் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டதாக பிலிப்பீன்ஸ் கூறியது.

ஒளிக்கதிர்களை ராணுவ விமானங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் திசைதிருப்பி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அல்லது தங்களுக்கு ஆகாய வெளிச்சம் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகின்றன.

இது குறித்து பிலிப்பீன்ஸ் அரசாங்கம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24ஆம் தேதி) அன்று சீனா உடனடியாக தனது அபாயகரமான, தூண்டுதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. சீன நடவடிக்கை பிலிப்பீன்ஸ் நாடு தனது தனிப்பட்ட பொருளியல் மண்டலத்தில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிலிப்பீன்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சீனாபிலிப்பீன்ஸ்விமானம்