ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் மோதியதில் விமானி மரணம்

ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் மோதியதில் விமானி மரணம்

1 mins read
b9833ba9-9591-43ce-8d13-4ab54844fa01
ஈரிருக்கை கொண்ட இரண்டு ‘வேன் ஆர்வி-7’ ரக விமானங்கள் வானில் மோதியதில் விபத்து நேர்ந்தது. - படம்: பிக்ஸாபே
Google News Preferred Icon

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகே இரண்டு இலகு ரக விமானங்கள் மோதியதில் விமானி ஒருவர் மாண்டார். விமானங்களில் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிட்னியின் தென்மேற்கே இருக்கும் வெடர்பர்ன் விமானநிலையத்திற்கு அருகே உள்ள புதர்ப்பகுதியில், விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை கூறியது.

அவசரச் சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் விமானத்தைக் கண்டுபிடித்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அதில் விமானி மட்டுமே இருந்ததாக நம்பப்படுகிறது.

மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அதன் விமானிக்குக் காயமில்லை.

ஈரிருக்கை கொண்ட இரண்டு ‘வேன் ஆர்வி-7’ ரக விமானங்கள் வானில் மோதிய விபத்துக் குறித்துப் புலனாய்வை மேற்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்