ஆடவர் நிர்வாணமாக நடக்க நீதிமன்றம் அனுமதி

ஸ்பெயினில் ஆடவர் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது குறித்து ஸ்பெயின் சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் கூறியது. 

29 வயதான ஆடவர் வெலன்சியா நகரில் வெறும் காலணிகள் மட்டும் அணிந்து கொண்டு நடந்துள்ளார். தன்னுடைய கொள்கைகளைப் பின்பற்றி தான் நடப்பதால் அபராதம் விதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்பது அந்த ஆடவரின் வாதம். 

2020லிருந்து தான் ஆடைகள் இல்லாமல் பிறந்த மேனில் பொது இடங்களுக்குச் செல்வதாக அவர் கூறுகிறார். அவதூறுகளைவிட தனக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார். 

ஸ்பெயினில் பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பதற்கு சட்டப்படி அனுமதி உண்டு. 1988ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் கடற்கரைகளைத் தவிர மற்ற பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!