கண்ணீர் மல்க ஒபாமா வேண்டுகோள்

அமெ­ரிக்­கா­வில் அதி­க­ரித்து வரும் துப்­பாக்கி கலா­சா­ரத்தைக் கட்­டுப்­படுத்த உணர்ச்­சி­பூர்­வ­மான வேண்­டு­கோளை விடுத்­துள்­ளார் அதிபர் பராக் ஒபாமா. துப்­பாக்கி வாங்­கு­வது தொடர்­பான விதி­முறை­களை கடுமை­யாக்­கும் திட்டம் பற்றி வெள்ளை மாளிகை­யில் மக்களிடம் உரை­யாற்­றி­ய­போது அவரின் கண்­களில் இருந்து கண்ணீர் பெரு­கி­யது. துப்­பாக்­கிச் சூட்டுச் சம்பவங்களில் கொல்­லப்­பட்­ட­வர்களின் குடும்பத்­தி­னர் சூழ்ந்­தி­ருக்க அவர் பேசினார். “துப்­பாக்கி வைத்­தி­ருக்க அமெ­ரிக்கர்­களுக்கு­ உள்ள சட்­ட­பூர்வ உரிமை, வழி­படு­வதற்­கும் அமை­தி­யாக ஒன்­று­கூ­ட­வும் வாழவும் உள்ள உரிமை­யு­டன் சம­நிலைப்­படுத்­தப்­பட வேண்டும்,” என்ற­போது அவரது குரல், கோபத்­தில் உயர்ந்தது.

கனக்டிகட், நியூடன் நகரில், 2012 டிசம்ப­ரில் 20 குழந்தை­களும் ஆறு பெரி­ய­வர்­களும் கொல்­லப்­பட்ட சம்ப­வத்தைக் கையாள்­வது தமது பணியில் மிகச் சிர­ம­மா­ன­தாக இருந்தது என்றார் அவர். “அந்தச் சம்பவத்தை நினைக்­கும் போதெல்லாம் எனக்கு கோபம் வரு ­கிறது,” என்று கன்­னங்களில் கண்ணீர் வழிந்­தோட அவர் கூறினார். “அந்தச் சம்ப­வம் என்னை மாற்­றி­யது, அந்நாளை மாற்றியது” என்றார் அவர்.