வடகொரியாவின் வெடிகுண்டு சோதனை

பியோங்யாங்: அணுகுண்டைவிட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை பூமிக்கு அடியில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்தச் சோதனை உண்மையாக இருந்தால் இது வடகொரியாவின் நான்காவது அணுவாயுத சோதனையாகும்.

2006ஆம் ஆண்டிலிருந்து வடகொரியா, இந்த சோதனையை- யும் சேர்த்தால் நான்கு அணு வாயுத சோதனைகளை மேற்கொண் டுள்ளது. வடகொரியாவின் முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நேற்றுகாலை 1-0.00 மணிக்கு வெற்றிகரமாக நடத்தப் பட்டது. இந்த வெற்றியால் உலகின் அணுவாயுத சக்தி கொண்ட நாடுகள் பட்டியலில் இணைகிறோம்,” என்று வடகொரிய தேசிய தொலைகாட்சி அறிவித்தது.

வடகொரியா வழக்கமாக அணு வாயுத சோதனை மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது கண்டறியப்பட்ட ஒரு மணி நேரத்தில் வடகொரியாவின் இந்த அறிவிப்பு வெளியானது. நிலநடுக்கம் அந்நாட்டின் அணுவாயுத சோதனைப் பகுதியில் அல்லது அதற்கு அருகே ஏற்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று அணுவாயத சோதனைகளை இந்தப் பகுதியில்தால் வடகொரியாக நிகழ்த்தியது.

ஹைட்ரஜன் குண்டு சோதனை பற்றிய ஆவணத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கையெழுத்திடுகிறார். படம்: ஏஎஃப்பி