ஆஸ்திரேலியா: யார்லூப் நகரில் கட்டுங்கடங்கா காட்டுத் தீ

பெர்த்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள யார்­லூப் நக­ரில் மூன்­றில் ஒரு பகு­தியை காட்­டுத் தீ அழித்­துள்­ளது. பெர்த் நக­ருக்கு தெற்கே உள்ள யார்­லூப் நக­ரம் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நக­ரம். இந்த நக­ரத்­தின் மொத்த மக்கள் தொகை 500 முதல் 600 வரை­தான் இருக்­கும். அங்கு கிட்­டத்­தட்ட 250 வீடு­கள் உள்­ளன. இதில் 95 வீடு­கள் தீக்கு இரை­யாகி விட்டன. நேற்று முன்தினம் இரவு பிடித்து எரியத் தொடங்கிய தீ கட்­டுக்க­டங்கா­மல் கொழுந்து விட்டு எரி­ந்து 24 மணி நேரங்களில் இரட்­டிப்­பாகி 53,000 ஹெக்­டேர் நிலப்­ப­ரப்­புக்­குப் பர­வி­யது.

அந்­ந­க­ரத்­தில் உள்ள ‘தீ மற்­றும் அவ­சர சேவை மைய’த்தின் ஆணை­யர் வெய்னி கிரெக்­சன், “தீ சம்ப­வம் இந்த நக­ருக்கு மிகப் ­பெ­ரிய பேரி­ழப்பைத் தந்­துள்­ளது,” என செய்­தி­யா­ளர்­களி­டம் கூறினார். “நாங்கள் எண்­ணற்ற அரிய கட்­ட­டங்களை இழந்­துள்­ளோம். அவற்­றுள் பல வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த கட்­டடங்கள். “அதிர்ஷ்­ட­வ­ச­மாக மக்­களில் மூன்று, நான்கு பேர் சிறு காயங்களு­டன் தீயி­லி­ருந்து தப்­பி­னர். மூவரைக் காண­வில்லை,” என்றார். வீடு­களை­யும் வாக­னங்களை­யும் கரிக்­கட்டை­­­க­ளா­க­வும் எலும்புக்­ கூடு­க­ளாகவும் உருக்­குலை­யச் செய்­துள்­ளது இந்த கொடூ­ரத் தீ என அந் ­நகர மக்கள் தங்கள் வேதனையை வெளிப்­படுத்­தி­னர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலம் சுமத்ரா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம்

நீச்சல் உடையில் பெட்ரோல் நிலையத்துக்குப் படையெடுத்த ஆண்கள். படங்கள்: ஊடகம்

20 Nov 2019

நினைத்தது வேறு, நடந்தது வேறு; ஆனாலும் லாபம்தான்

கழுத்து, காது, கைகளில் தக்காளிப் பழங்களைக் கோத்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் மணப்பெண். படம்: ஊடகம்

20 Nov 2019

கல்யாணத்துக்கு நகைகள் மட்டுமல்ல; சீதனமும் 3 கூடை தக்காளிதான்