விழிப்புநிலையில் பாரிஸ் போலிஸ்

பிரெஞ்­சுத் தலை­ந­கர் பாரி­ஸில் நேற்று முன்­தி­னம் ஐஎஸ்ஐ­எஸ் கொடி வரை­யப்­பட்ட தாளு­ட­னும் கத்­தி­யு­ட­னும் காவல் நிலை­யம் ஒன்­றில் நுழைய முயன்றார். அவர் தற்­கொலைத் தாக்குதல் நடத்துபவனைப் போன்ற ஆடை­யு­ட­னும் கத்­தி­யு­ட­னும் காணப்­பட்­டார். அவரை போலி­சார் சுட்­டுக் கொன்ற­னர். அவர் அணிந்­தி­ருந்தது போலி­யான தற்­கொலை ஆடை என்­றும் அவர் வைத்­தி­ருந்த கத்தி, இறைச்சி வெட்டப் பயன்­படும் கத்தி என்­றும் பின்னர் தெரிய வந்தது. அவர் 2013ஆம் ஆண்டு ஒரு­முறை திருட்­டுக் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர் என்­றும் அவர் மொரோக்கோ அல்லது துனி­சியா நாட்டைச் சேர்ந்தவராக இருக்­க­லாம் என்று கூறப்­படு­கிறது. இந்தச் சம்ப­வத்தைத் தொடர்ந்து அந்தக் காவல் நிலை­யத்தைச் சுற்றிலும் பாது­காப்­புப் பலப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.