பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 10 பேர் மரணம்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 10 பேர் மரணம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள போலிஸ் சோதனைச் சாவடியை குறிவைத்து போராளிகள் நடத்திய தற் கொலைத் தாக்குதலில் குறைந் தது 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அத்தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக போலிசார் கூறினர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு போராளி, போலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது தனது மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்கச் செய்ததாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறனார்.

அந்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்களை அவன் ஏற்றி வந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து போலிஸ் அதிகாரிகளும் அடங்கு வர். அத்தாக்குதலுக்குத் தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சென்ற மாதம் பெஷாவரில் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் குண்டு வெடித்த இடத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அந்தக் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. அத்தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி