பாகிஸ்தான் பல்கலையில் பயங்கரவாதத் தாக்குதல்; 21 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று திடீரென நுழைந்து பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலில் மாண வர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். 2014 டிசம்பரில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்து 134 மாணவர்களைக் கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்ற தெஹ்ரீக்- =இ-=தலிபான் அமைப்பே இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்று இருக்கிறது.

கைபர் பக்துன்க்வா மாகாணம், பெஷாவரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள சர்சடா நகரில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகம். 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். காலை நேரத்தில் நிலவிய கடும் பனியைச் சாதகமாகப் பயன் படுத்தி சுமார் 8 மணியளவில் பல்கலைக்கழக சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து பயங்கரவாதிகள் உள்ளே புகுந்ததாகக் கூறப்பட்டது. முதலில் அவர்கள் பல்கலைக் கழக முதல்வரின் அறைக்குள் நுழைந்ததாகவும் பின்பு தனித் தனியாக பிரிந்து சென்று வகுப் பறைகளுக்குள், விடுதிகளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்ட தாகவும் சொல்லப்பட்டது.

மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற பேராசிரியர் ஒருவரும் பயங்கரவாதிகளின் குண்டு களுக்கு இரையானார். போலிஸ், ராணுவத்தினர், சிறப்புப் படையினர் ஆகியோர் இணைந்து தரைவழியாகவும் வான்வழியாகவும் பயங்கரவாதி களை ஒழிக்கும் பணியில் ஈடு பட்டனர். பல்கலைக்கழகத்தினுள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சத்தம் கேட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.