லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம்

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென் கோவை 2006ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு அநேகமாக ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு புட்டினை கடுமையாகக் குறை கூறிவந்த லிட்வினென்கோ அவரது 43 வயதில் ரஷ்ய உளவுத் துறையினரால் லண்ட னில் கொலை செய்யப்பட்டார். லண்டன் ஹோட்டலில் லிட்வினென்கோ தங்கியிருந்த போது விஷம் கலந்த தேநீரைக் குடித்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவர் மரணம் அடைந்தார்.

லண்டன் மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது அவர் தனது மரணத்திற்கு திரு புட்டினே காரணம் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில் விசாரணைக் குழுவினரின் அறிக்கை வெளிவந்துள்ளது. லிட்வினென்கோவைக் கொலை செய்ய திரு புட்டின் கையெழுத் திட்டிருக்கலாம் என்று விசார ணைக் குழுவின் தலைவர் சர் ராபர்ட் ஓவன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக லிட்வினென் கோவின் மனைவி மெரினா கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் லிட்வினென்கோ. படம்:(கோப்புப் படம்) நியூயார்க் டைம்ஸ்