42 மில்லியன் ரிங்கிட் விவகாரம்: நஜிப் மறுப்பு

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறு வனத்தின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லி யன் ரிங்கிட் தொகை தமது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் நஜிப் ரசாக் மறுத் திருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக திரு நஜிப் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த நிதியை பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப் படுகிறது. ஆனால், 42 மி. ரிங்கிட் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஹவாரிசாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான ‚விசாரணை முடியும் வரையில் தமது கட்சிக் காரர் எந்தப் பதிலும் கூற மாட்டார் என்றும் ஹவாரிசாம் கூறினார். மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நன்கொடை யாளரிடமிருந்து 2.6 பில்லியன் ரிங்கிட், எஸ்ஆர்சி நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட் தொகையை பிரதமர் நஜிப் பெற்றுள்ளதால், அவர் நாட்டை வழிநடத்தத் தகுதியற்ற வர் என திரு லிங் லியோங் சிக் கருத்து தெரிவித்திருந்தார்.