அமெரிக்காவை மிரட்டும் கடும் பனிப்புயல்

நியூயார்க்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதி களில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அச்சம் அடைந் துள்ளதாக தகவல்கள் கூறின. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசக்கூடும் என்பதால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு உறைபனி மூடலாம் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக வா‌ஷிங்டன், நியூயார்க், பால்டிமோர், வெர்ஜினியா, கரோலினா, பிலடெல்பியா, மேரிலாண்ட் போன்ற பகுதிகளை இந்த பனிப்புயல் கடுமையாகத் தாக்கலாம் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் இம்மாநிலங்கள் வழியாகச் செல்லும் ஆயிரக்கணக்கான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை, சனிக் கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் சுமார் 5,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. வா‌ஷிங்டனிலும் வட கரோலினா, மேரிலாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை கடும் பனிப்புயல் அச்சுறுத்தும் வேளையில் வா‌ஷிங்டன் அருகே உள்ள பிளாசா பகுதியில் உறைபனி மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த பனிப்புயலின்போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் தொலை தூர பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. வா‌ஷிங்டனிலும் ஐந்து மாநிலங்களிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி