மகிந்த ராஜபக்சேயின் மகன் யோ‌ஷித்த ராஜபக்சே கைது

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மகன் யோ‌ஷித்த ராஜபக்சே உட்பட நால் வரை தடுப்புக் காவலில் வைக்க இலங்கையின் கடுவளை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ‘சிஎஸ்என்’ எனும் கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனத் தின் மூலம் நடந்ததாகக் கூறப் படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

சிஎஸ்என் நிர்வாகிகளான நிஷாந்த ரணதுங்க, மகிந்த ராஜபக்சேயின் பேச்சாளர் ரொஹன் வெலிவிட்ட ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று கொழும்புகெசட் இணையத் தில் குறிப்பிட்டது. முன்னதாக கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் யோ‌ஷித்த ராஜபக்சேயிடம் சிறப்புப் போலி-ஸ் பிரிவினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை பிப்ரவரி 11ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது-. சனிக் கிழமை அன்று கடுவளை நீதி மன்றத்தில் யோ‌ஷித்த ராஜபக்சே முன்னிலைப்படுத்தபட்டார்.

அப்போது அவரது தந்தை மகிந்த ராஜபக்சே, தாயார் ‌ஷிரந்தி ராஜபக்சே, மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பய ராஜபக்சே உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலர் இருந்தனர். இதற்கிடையே, மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிபர் மகிந்த ராஜ பக்சே, “எங்கள் குடும்பத்தினரை கைது செய்வதால் எங்களுடைய நடவடிக்கைகளை தடுத்துவிட முடியாது,” என்று முழங்கினார்.

கைது செய்யப்பட்ட யோ‌ஷித்த ராஜபக்சே. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும்போது தமது ஆதரவாளர்களுடன் காணப்படும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (நடுவில்). படம்: இபிஏ

12 Nov 2019

தற்காப்பு வாதத்தை முன்வைக்க நஜிப்புக்கு உத்தரவு

ஹாங்காங்கின் சாய் வான் ஹோ பகுதியில் துப்பாக்கியைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் குறிவைக்கும் போலிஸ் அதிகாரி. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஹாங்காங் கலவரம் தீவிரம்

நடைபாலத்தில் ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது. படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

12 Nov 2019

ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது