ஸிக்கா கிருமி: கொலம்பியாவில் 2,000 கர்ப்பிணிகள் பாதிப்பு

பொகோடா: கொடிய ஜிக்கா கிரு­மி­யின் தாக்­கு­தல் உலகையே அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் நிலை யில் தென் அமெ­ரிக்க நாடான கொலம்­பி­யா­வில் 2,000 கர்ப்­ பி­ணி­கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அந்­நாட்­டு சுகாதார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. தென்­அ­மெ­ரிக்கா, மத்திய அமெ­ரிக்கா, கரி­பீ­யன் நாடுகள் உட்பட இதுவரை 25க்கும் மேற்­பட்ட நாடு­களில் ஸிக்கா கிருமி பாதிப்பு உள்ளது. இந்­நா­டு­களில் 400,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஸிக்கா தொற்று குறித்து பிரேசில் எச்சரித்தது. அப்போதிலிருந்து இதுவரை பிரே­சி­லில் மட்டும் 150,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள­னர். ஸிக்கா பாதிப்பில் முதலிடம் பிரேசிலுக்கு. இரண்டாவது இடத்தில் கொலம்பியா உள்ளது.

இந்­நிலை­யில், கொலம்­பி­யா­வில் 20,297 பேருக்கு ஸிக்கா வைரஸ் பாதிப்பு இருப்­ப­தா­க­வும் இதில் 2,116 பேர் கர்ப்­பி­ணி­கள் என்றும் அந்­நாட்­டுச் சுகாதார நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது. ஸிக்கா வைரஸ் பாதித்த கர்ப்­பி­ணி­களுக்­கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்­பு­ களு­டன் குழந்தை­கள் பிறக்­கின் றன. இதனால் இப்­போதைக்­கு பெண்கள் கருத்­த­ரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்­ளிட்ட நாடு கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளன. இவ்வாண்டு இறுதிக்குள் மூன்று முதல் நான்கு மில்லியன் பேர் ஸிக்கா கிருமியால் பாதிக்கப் படுவர் என்று ஐநாவின் உலகச் சுகாதார நிறுவனம் சென்ற வாரம் எச்சரித்து உள்ளது. இதற்கிடையே, 2015ஆம் ஆண்டில் ஸிக்கா கிருமி இந்தோனீசியாவுக்குப் பரவி விட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவின் காலி நகரில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினியைத் தெளிக்கையில் குடியிருப்பார்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2019

கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்