குடியேறிகள் படகு மூழ்கி 37 பேர் பலி

அய்­வ­சிக்: துருக்கிய கடற்­கரை பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் மூழ்கிய குடி­யே­றிகள் படகு ஒன்றில் பயணம் செய்த குழந்தை கள் உள்­ளிட்ட 37 பேரின் சடலங் களைக் கடலோரக் காவல் படை­யி­னர் மீட்­டெ­டுத்­த­னர். இதுவரை 75 பேரை உயிரோடு மீட்­டுள்­ள­னர். வட­மேற்கு துருக்­கி­யில் உள்ள ‘கனக்­கலே’ மாநி­லத்­திற்கு அருகில் அந்த சம்ப­வம் நடந்தது. குடி­யே­றிகள் பயணம் செய்த அந்தப் படகு கிரேக்­கத் தீவான லெஸ்போஸ் வழியாக ஐரோப்­பாவை நோக்கிச் சென்றது. அந்தப் படகில் பயணம் சிரியா, ஆப்கா னிஸ்தான், மியன்­மார் ஆகிய நாடு­களைச் சேர்ந்த­வர்­கள் பயணம் செய்த­னர். சிரியா, ஈரான் ஆகிய நாடு களில் அமைதி திரும்­பி­ய­தும் அக­தி­களில் பெரும்பா­லோர் மறு படியும் தங்கள் நாடு­களுக்­குத் திரும்­பு­வர் என்று எதிர்­பார்ப்­ப­தாக ஜெர்மன் பிர­த­மர் ஏஞ்சலா மெர்கல் கூறியதை அடுத்து இந்த விபத்து ஏற்­பட்­டுள்­ளது.

யூகோஸ்­லா­வி­யாவை உதா ரண­மா­கக் காட்டிய ஏஞ்சலா மெர்கல், 1990ஆம் ஆண்டில் ஜெர்­ம­னிக்கு வந்த யூகோஸ்லா விய அக­தி­களில் 70 விழுக்காட்­டி­னர் அவர்­கள் நாட்டில் அமைதி திரும்­பி­ய­தும் மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்­பிச் சென்ற­னர் என்றார். இவ்­வாண்டு மட்டும் இதுவரை 218 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர் எனப் புலம்­பெ­யர்­வோ­ருக்­கான அனைத் துலக அமைப்பு தெரி­வித்­து உள்­ளது. சிரி­யா­வில் இருந்து 250,000 பேர் அக­தி­க­ளாக துருக்கி சென்று உள்­ள­னர். போதைப் பொருள் கடத்­தல் தொடர்­புக்கு எதி­ரா­க­வும் ஐரோப்­பிய நாடு­களுக்­குள் அகதிகள் புலம்­பெ­யர்­வதைத் தடுக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்க துருக்கி ஒப்­பு­ தல் அளித்­தது. இதற்­குப் பதிலாக, அக­தி­களின் நிலைமையை முன்­னேற்ற உத­வு­வதற்கு 300 கோடி யூரோ நிதியை அளிப்­ப­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யம் உறுதி அளித்­துள்ளது.

Loading...
Load next