அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அயோவா மக்கள் வாக்களிப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் வேட் பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக முதன் முதலில் ஐயோவா மக்கள் நேற்று வாக்களிக்கத் தொடங் கினர். அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அக்கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளன.

அதற்கான வாக்கெடுப்பு முதலில் அயோவா, நியூ ஹேம்ஷையர் ஆகிய இரு மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. அயோவாவில் வசிக்கும் 3.1 மில்லியன் மக்கள் தொகையில் 584,000 பேர் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள். சுமார் 611,000 பேர் குடியரசுக் கட்சி வாக்காளர்கள். எந்தக் கட்சியையும் சாராத 725,000 பேர் வாக்களிக்க பதிவு செய்து கொண்டுள்ளனர். அவ்விரு கட்சிகளின் வாக்களிப்பு நேற்றிரவு 7 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணி) தொடங்கியது. வாக்களிப்பு முடிந்த பின்னர் வாக்குகள் ரகசியமாக எண்ணப் படும். அதிக வாக்குகளைப் பெறுபவர் மாநில அளவில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

அயோவா பிரசாரத்தின்போது ஹில்லரி கிளின்டன், தமது ஆதரவாளர்களை வரவேற்கிறார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விநியோக மையத்திலிருந்து வாக்குச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் போன்றவற்றை போலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் தேர்தல் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2019

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்

லண்டன் சென்றிருந்த ஹாங்காங் நீதித்துறை அமைச்சர் தெரேசா செங்குடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்து, அவரைக் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. படங்கள்: டுவிட்டர், இபிஏ

16 Nov 2019

லண்டனில் ஹாங்காங் அமைச்சர் மீது தாக்குதல்; சீனா கண்டனம்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை