மியன்மாரின் புதிய சகாப்தம்; நாடாளுமன்ற முதல் கூட்டம்

யங்கூன்: மியன்மாரில் தேர்ந் தெடுக்கப்பட்ட புதிய நாடாளு மன்றம் நேற்று அதன் முதல் கூட்டத்தைத் தொடங்கியது. புதிய அரசியல் சகாப்தத்தில் மியன்மார் நுழைந்திருக்கிறது. திருவாட்டி ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நம்பிக்கையுடன் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மியன்மாரில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆரஞ்சு நிற சீருடை அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள் முதல் நாள் பணியை நேற்று உற்சாகத்துடன் தொடங்கினர். திருவாட்டி சூச்சி, கருத்து எதுவும் கூறாமல் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற கீழவை சபாநாய கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு வின் மிண்ட், மியன்மாரின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் பெருமைப்படும் நாளாகும்,” என்று கூறினார். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும் பான்மை வகித்த போதிலும் 25 விழுக்காடு இடங்கள் ராணுவத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு வருகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீச்சல் உடையில் பெட்ரோல் நிலையத்துக்குப் படையெடுத்த ஆண்கள். படங்கள்: ஊடகம்

20 Nov 2019

‘நீச்சல் உடையில் வருவோருக்கு பெட்ரோல் இலவசம்’

கழுத்து, காது, கைகளில் தக்காளிப் பழங்களைக் கோத்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் மணப்பெண். படம்: ஊடகம்

20 Nov 2019

கல்யாணத்துக்கு நகைகள் மட்டுமல்ல; சீதனமும் 3 கூடை தக்காளிதான்

ராணுவ வீரர்களுடன் காணப்படும் கிம் ஜோங் உன் (முதல் வரிசையில் நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

தென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும்: வடகொரியா