டிரம்ப்பை தோற்கடித்தார் டெட் குருஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முதல் கட்டமாக நேற்று அயோவா மாநிலத்தில் வாக்களிப்பு நடந்தது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டிக் களத்தில் இறங்கியுள்ள டெக்சஸ் மாநில செனட்டர் டெட் குருஸ், தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப்பை தோற் கடித்தார். குருஸ் 28 விழுக்காடு வாக்குகளையும், டிரம்ப் 24 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர்.

அவர்களுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23 விழுக்காடு வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் டெட் குரூஸை குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று கருதப்படுகிறது. முன்னதாக குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வெற்றி பெறும் வாய்ப்பு டிரம்ப்பிற்கு அதிகம் இருப்பதாகக் கூறப் பட்டது. கடந்த வாரம் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் டொனால்டு டிரம்ப்புக்கு 34 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டது. அவருக்கு அடுத்த நிலையில் டெட் குருஸிற்கு 20 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

அயோவா மாநில வாக்களிப்பில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டெட் குருஸ் (நடுவில்) ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றுகிறார். அவருக்குப் பக்கத்தில் அவரது மனைவி ஹெய்டி. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next