தாய்லாந்தில் யானை தாக்கி சுற்றுலாப் பயணி மரணம்

பேங்காக்: தாய்லாந்தின் கோ சாமுய் தீவில் ஒரு யானை தாக்கியதில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் மரணம் அடைந்ததாக போலிசார் கூறினர். இறந்தவர் 36 வயதான கிரேத் குரோவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தன் மகளுடன் யானை மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சினமுற்ற யானை அவ்விருவரையும் கீழே தள்ளியது. யானைப்பாகனால் அந்த யானையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சமயம் வெயில் அதிகமாக இருந்ததால் யானை சினமுற்றதாகக் கூறப்பட்டது. கீழே விழுந்த அந்த பிரிட்டிஷ்காரருக்கு ஒரு கால் செயற்கைக் கால் என்பதால் அவரால் எழுந்து ஓடமுடியவில்லை. அவரை நெருங்கிய யானை அவரைத் தாக்கிக் கொன்றது. அந்த சம்பவத்தில் அவரின் மகளும் யானைப்பாகனும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

Loading...
Load next