கிரீஸ் செல்லும் குடியேறிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பிள்ளைகள்

ஜெனிவா: ஐரோப்பிய நாடுகளின் கரையோரத்தில் மேலும் இரு பிள்ளைகள் மூழ்கி இறந்திருக்கும் வேளையில், துருக்கியிலிருந்து கிரீஸுக்கு குடியேறிகளாக வருவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பிள்ளைகள் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. இதேபோல், கிரீஸிலிருந்து மெசிடோனியாவுக்குச் செல்வோ ரில் ஆடவர்களைவிட மாதர், பிள்ளைகளே அதிகமானோர் என்றும் ஐநா குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கூறு கிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் மிக அதிக அளவிலான மக்கள் வன்முறை, ஏழ்மை, ஆகியவற்றிலிருந்து தங் களை விடுவித்துக் கொள்ள உயிரைப் பணயம் வைத்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் சூழலில் வெளிவந்துள்ளது குறிப்பிடத் தக்கது. “கிரீஸ், துருக்கி நாடுகளுக்கு இடையிலான கொடுமையான கடற்பயணத்தைக் கடப்பவர்களில் 36 விழுக்காட்டினர் பிள்ளைகள்,” என்று யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான சேரா கிரோவ் விளக் கினார். அத்துடன், மெசிடோனியா நாட்டுக்குச் செல்வோரில் 60 விழுக்காட்டினர் மாதர், பிள்ளை கள் என்றும் இவர் கூறுகிறார்.

ஏதென்ஸ் அருகே ஒரு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்த படகிலிருந்து குடியேறிகளும் அகதிகளும் வெளியேறும் வேளையில் அவர்களில் ஒருவரான இந்தச் சிறுவன் போர்வைகளை தலையில் சுமந்து செல்கிறான். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்