முதலமைச்சர் பதவியிலிருந்து மகாதீர் மகன் விலகினார்

அம்னோ தலைவர்கள் தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால் மலேசியாவின் கெடா மாநில முத லமைச்சர் முக்ரிஸ் மகாதீர், 51, நேற்று தமது பதவியைத் துறப் பதாக அறிவித்தார். இதனால் அங்கு இரு வாரங்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஸ்மா டாருல் அமானில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தி யாளர் கூட்டத்தில் அவர் தமது பதவி விலகலை அறிவித்தார். கெடா மாநில சட்டமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவி யிலிருந்து விலகுவதாக அறிவித்த முக்ரிஸ், தமது தோள் மீது இருந்த பெரும் சுமை இறக்கிவைக்கப்பட்ட நிம்மதியில் தாம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதி ராகக் குரல் கொடுத்ததன் காரண மாக தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறை கூறினார். உள்கட்சி சண்டைக்கும் முதுகில் குத்தும் அரசியலுக்கும் தாம் பலியாகிவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். “சொல்வதற்கு வருந்துகிறேன். நஜிப் பிரதமராக நீடிக்கும் வரை அம்னோ வலுவிழந்து இருக்கும். முறைகேட்டுக்கு மேல் முறைகேடு. இனியும் சகித்துக்கொள்ள முடி யாது என்றே நான் கருதுகிறேன். உண்மையாகவே நம் எல்லோ ருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் தலைநிமிர்ந்து நடக்க முடி யாத நிலை உள்ளது.

 

முக்ரிஸ் மகாதீர் தமது பதவி விலகலை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டம். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை