அசாஞ்சேக்கு ஐநா சட்டக்குழு ஆதரவு

லண்டன்: லண்ட­னில் உள்ள ஈக்­வ­டார் தூத­ர­கத்­தில் கடந்த மூன் றரை ஆண்­டு­களாகத் தஞ்சம் புகுந்தி­ருக்­கும் விக்­கி­லீக்ஸ் நிறு­வ­னர் ஜூலியன் அசாஞ்­சே­, 44, சுதந்திரமாக நடமாட அனு மதிக்கப்படவேண்டும் என்றும் அவரது சுதந்திரம் முடக்கப் பட்டதற்கு அவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐநா சட்டக் குழு அறிவித்துள்ளது. “அசாஞ்சேயின் தடுப்புக் காவல் முடிவுக்கு வர வேண்டும். அவரது சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்,” என்றது ஐநா குழு. ‘பல்வேறு விதங்களில் அசாஞ்சேயின் சுதந்திரம் பறிக்கப் பட்டது’ என்றும் 2010ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் ஐநா குழு கூறியது. தான் சட்­ட­வி­ரோ­த­மாக சிறை வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐநா குழு­வி­டம் புகார் அளித்­தி­ருந்தார் அசாஞ்சே.

கைதாவதிலிருந்து தப்புவதற்காக 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அசாஞ்­சே­ ஈக்­வ­டார் தூத­ர­கத்­தில் அடைந்து கிடந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அமெ­ரிக்க அரசின் 500,000 ராணுவ ரகசிய ஆவ­ணங்களையும் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் தொடர்பான 250,000 ஆவணங்களையும் விக்­கி­லீக்ஸ் வெளியிட்­டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச பலத்த பாதுகாப்புடன் தமது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார். படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

வாக்காளர்கள் சென்ற பேருந்துகள் மீது துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். படம்: பெர்னாமா

17 Nov 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி