பிரேசிலில் கொசு மருந்து விற்பனை அதிகரிப்பு

ரியோ டி ஜெனிரோ: கொசு மூலம் பர­வக்­கூ­டிய ஸிக்கா கிரு­மி­யின் தாக்கம் மிக அதி­க­மாக இருக்­கும் பிரே­சி­லில் கொசுக் கடி­யி­லி­ருந்து தப்­பு­வதற்­கா­கப் பயன்­படுத்­தப்­படும் மருந்து வகை­களின் விற்பனை கிடு­கி­டு­வென்று உயர்ந்­துள்­ளது. ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் விற் பனை ஏழு மடங்கு அதிகரித்து உள்ளதாக மருந்து விற்பனை யாளர் ஒருவர் கூறினார். 6.5 மில்லியன் குடிமக்களுக்கும் பல்லாயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளுக்கும் கொசுக் கடியிருந்து தப்புவது இன்றிய மையாததாக இருக்கிறது. கர்ப் பிணிகளைத் தாக்கும் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,074 என்று பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. சென்ற வாரம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசர நிலையை அறிவித்தது.