ஏவுகணை; வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்

பெய்ஜிங்: செயற்கை கோளுடன் ஏவுகணையை விண்ணில் பாய்ச் சிய வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித் துள்ளன. அதன் நட்பு நாடான சீனாவும் வடகொரியாவின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. “அனைத்துலக எதிர்ப்புகளுக்கு இடையே நெடுந்தொலைவு ஏவு கணையை வடகொரியா ஏவி யிருப்பது சீனாவுக்கு வருத்தமளிக் கிறது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங்கை மேற்கோள்காட்டி அமைச்சின் இணையப் பக்கம் குறிப்பிட்டது. “விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்த வடகொரியாவுக்கு உரிமையுள்ளது. ஆனால் அந்த உரிமை ஐநாவின் பாதுகாப்பு மன்ற தீர்மானங்களுக்கு உட்பட்டது. “ஆனால் இந்த நிலவரத்தை தொடர்புடைய அனைத்து தரப் பினரும் அமைதியாகக் கையாள வேண்டும்” என்று சீனா கேட்டுக் கொண்டது.

கடந்த மாதம் வடகொரியா மேற்கொண்ட அணுவாயுத சோதனைக்கும் சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. சீனாவைத் தவிர ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் கடும் கண் டனம் தெரிவித்துள்ளன. ஐநா பாதுகாப்பு மன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்றும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கிடையே ஏவுகணை தற்காப்பு அரண்கள் அமைப்பது குறித்து அமெரிக்காவுடன் விவா தித்து வருவதாக தென்கொரியா கூறியிருக்கிறது. வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க உலகின் ஆக நவீன மான ‘தாட்’ ஏவுகணை தற்காப்பு முறையை பரிசீலித்து வருவதாக தென்கொரியா மூத்த தற்காப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏவுகணை பாய்ச்சும் நிகழ்ச்சியில் வட கொரியா தலைவர் கிம் -ஜோங் உன்னும் (நடுவில்) பங்கேற்றதாகக் கூறப்பட்டது. வடகொரியா தொலைக் காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தை தென்கொரியா வெளியிட்டது. படம்: ஏஎஃப்பி