‘சாலட்’ கீரைகளில் நெளிந்த சிலந்தி

சிட்னி: பேரங்காடியில் வாங்கிய ‘சாலட்’ கீரைப் பொட்டலத்தில் ராட்சச சிலந்தி ஒன்று நெளிந்ததைக் கண்டு ஆஸ் திரேலிய குடும்பத் தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளூர் பேரங்காடியை குறிப்பிட்டு சோ பெர்ரி என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார்: “இத்தாலிய ‘சாலட்’ பொட் டலத்தை வாங்கி வீட்டுக்கு வந்தோம். அந்தப் பொட்டலத் தை திறந்து பார்த்தால் அது எங்களை வரவேற்றது,” இந்தத் தகவலுக்கு கீழே பதிவு செய்யப்பட்ட காணொளி படத்தில் சாலட் கீரைகளுக்கு இடையே ராட்சச சிலந்தி ஒன்று ஓடியது.

இந்தக் காணொளியை 6.8 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் அதோடு 100,000 முறைக்கு மேல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. செல்வி பெர்ரி கேள்வி ஒன்றையும் எழுப்பியிருந்தார். ‘சால்மெனல்லா’ கிருமி காரணமாக பல நிறுவனங்களின் ‘சாலட்’ கீரைகள் மீட்டுக் கொண் டதற்கும் இந்தக் கண்டுபிடிப் புக்கும் தொடர்பு இருக்கிறதா,” என்று அவர் கேட்டிருந்தார். கடந்த வியாழக்கிழமை ஆஸ் திரேலியாவில் சால்மெனல்லா கலப்படத்தால் உல்ஸ்வொர்த், கோல்ஸ் போன்ற பேரங்காடிகளி லிருந்து பல நிறுவனங்களின் ‘சாலட்’ பொட்டலங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிட்டகாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் மூன்று பெட்டிகள் முற்றிலுமாகச் சிதைந்தன. படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்

சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைக்கும் பழக்கம் எல்வுக்கு இருந்ததால், உணவைச் சாப்பிட வரும் கரப்பான் பூச்சி காதுக்குள் சென்றிருக்கலாம் என்றார் மருத்துவர். படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஆடவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம்

மியோநகர் குளத்தில் நீந்திய மீனின் முகம் அச்சு அசலாக மனித முகத்தைப்போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது. படம், காணொளி: ஊடகம்

12 Nov 2019

'மனிதமுகம்' கொண்ட மீன்