அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலி - ஒருவர் கைது

மிச்சிகன்: அமெரிக்காவில் மிச்சிகனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவமாக இது இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அங்கு கலமாசு என்ற பகுதி யில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் குறைந்தது மூவர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி என்பிசி நியூஸ் நிறுவனம் தெரிவித்தது.

பலரும் குண்டடிபட்டு மாண்டதாகவும் சம்பவம் டெக்சாஸ் நகர்ப்பகுதியில் இருக்கும் கிராக்கர் பாரெல் என்ற உணவகத்துக்கு அருகே நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ஓர் அதிகாரி, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மர்ம மனிதன் நீல நிற சொகுசுக் காரில் வருவதாகவும் அவன் 50 வயதை தாண்டிய வெள்ளையர் என்றும் தாறுமாறாக சுட்டுத்தள்ளுபவர் என்றும் தெரிவித்து, பாதுகாப்பாக இருக்கும்படி மக்களை எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகப் பேர்வழி ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 45 வயது டாக்சி ஓட்டுநர் என்று தெரிய வந்துள்ளது.