கோலாலம்பூருக்கு தாக்குதல் எச்சரிக்கை

மலேசியத் தலைநகர் கோலாலம் பூரிலும் அதனைச் சுற்றிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதி கள் திட்டமிடக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் எச் சரித்துள்ளது. தாக்குதல் தாறுமாறாக இருக் கக்கூடும் என்றும் மேற்கத்திய நலன்களை அல்லது அவர்கள் அதிகம் சென்றுவரும் இடங் களைக் குறி வைத்து தாக்குதல் கள் நடக்கக்கூடும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் வழக்கமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு குறிப்பிட்ட அது, “கடற்கரை வட்டாரமான சாபாவுக்குச் செல்வதை மறுபடி யும் பரிசீலிக்கும்படி ஆஸ்திரேலி யர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆலோசனை தெரிவிக்கிறோம்,” என்றும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பீதியடையத் தேவை இல்லை என்று மலேசியர்களுக்கு கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் எல்லையில் அமைந்திருக்கும் சாபாவில் வெளிநாட்டினர் கடத்தப் படக்கூடும் என்ற மிரட்டல் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரிட்டனும் தனது குடிமக்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண் டாம் என்று அண்மையில் விழிப்பு எச்சரிக்கை விடுத்தது. அந்தப் பகுதிக்குச் செல்வது அதிக ஆபத்து நிறைந்தது என்று நியூசிலாந்தும் வகைப் படுத்தி உள்ளது. இருப்பினும் மலேசியாவைக் குறிப்பிட்டு எந்த ஒரு பயண எச்சரிக்கையையும் அமெரிக்கா இதுவரை விடுக்கவில்லை. ஆகக் கடைசியாக, கடந்த ஆண்டு அக்டோபரில் தனது குடிமக்கள் தென் பிலிப்பீன்சுக் கும் சாபாவுக்கும் இடைப்பட்ட சூலு தீவுகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்து இருந்தது.