நேப்பாள விமான விபத்து: மீட்புப் பணிகள் மீண்டும் துவங்கின

காட்மாண்டு: நேப்பாள மலைப் பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் சென்ற 23 பேரும் உயிரிழந்தனர். மோசமான பருவநிலை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் சடலங்களை மீட்கும் பணி தொடங்கியதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறின. விபத்தில் உயிரிழந்த 23 பேரில் பெரும்பாலானோர் நேப்பாள நாட்டவர்கள்.

நேப்பாளத்தில் விமான பாதுகாப்பு மோசமான அளவிலேயே இருந்து வருகிறது. டாரா ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டுவின் ஆட்டர் ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.