முகைதினை ஆதரித்துப் பேசினார் அம்னோ உதவித் தலைவர்

கோலாலம்பூர்: இன்று கூடும் அம்னோ உச்சமன்றம், கட்சித் துணைத் தலைவர் முகைதினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று வதந்திகள் பெருகிவரும் வேளையில் அவருக்கு ஆதர வாக அம்னோ உதவித் தலைவர் ஷஃபி அப்டல் குரல் கொடுத் துள்ளார். முகைதின், கடந்த ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முதல் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைத்தான் குறை கூறி வந்திருக்கிறாரே தவிர, அம்னோவுக்கு எதிராக எதுவுமே செய்ததில்லை என்று ஷஃபி கூறினார். அடித்தள உறுப்பினர் களும் தலைவர்களும் கட்சியையும் அரசாங்கத்தையும் வலுப் படுத்தவே குறை கூறுகிறார்கள் என்றும் அவர் சொன்னார். இப்போது கட்சியும் அரசாங் கமும் மக்களின் மனத்தைக் கவரவில்லை என்றார் அவர்.

Loading...
Load next