ஜெர்மனிக்கு 3.6 மில்லியன் அகதிகள் வரக்கூடும்

பெர்லின்: இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் ஜெர்மனிக்கு 3.6 மில்லியன் அகதிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் குடியேறிகளை ஜெர்மனி ஏற்றுக்கொண்டது. இருப்பினும் இந்த ஆண்டு ஜெர்மனிக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க விருப்பதாக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குடியேறிகள் பிரச்சினை தொடர்பில் மீண்டும் பேச்சு நடத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் பிரசல்ஸில் ஒன்று கூடியுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரியாவும் பால்கன் நாடுகளும் இணங்கியுள்ளன.