ஏடிஎம் இயந்திரத்தையே கடத்திய திருடர்கள்

கோலாலம்பூர்: முகமூடியணிந்த சிலர் சிலாங்கூரில் உள்ள ஒரு வங்கிக்குள் நுழைந்து அங் கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். அகழ்பொறியைப் பயன்படுத்தி அவர்கள் அந்த இயந்திரங்களை தோண்டி எடுத்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் வட்டார போலிஸ் படையின் தலைவர் ருஸ்லன் அப்துல்லா கூறினார். வங்கிக்குள் திருடர்கள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை களவாடிச் சென்றதாக வங்கி ஊழியர் ஒருவரிடமிருந்து நேற்று காலை தங்களுக்கு தகவல் வந்ததாக அந்த அதிகாரி கூறினார். களவுபோன இடத்தில் ஏழு கைரேகைகள் பதிவாகியிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

திருடர்கள் அந்த அகழ்பொறியை அங்கேயே விட்டுச்சென்றனர். முகமூடியணிந்த மூன்று அல்லது நான்கு பேர், அகழ்பொறியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைத் தோண்டி எடுப்பது அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பாதிவாகி யுள்ளது. மொத்த இழப்பு குறித்து வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.