கோலா சிலாங்கூரில் தரையில் மோதிய ஆகாயப் படை விமானம்

கோலாலம்பூர்: மலேசிய ஆகாயப் படை விமானம் ஒன்று கோலா சிலாங்கூர் கடற்கரை அருகே தரையில் இறங்கி மோதியது. ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாது காப்பாக உள்ளதாக ‘த ஸ்டார் ஆன்லைன்’ இணையத் தளம் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை காலை சுபாங் ஆகாயப்படை விமானத் தளத்திலிருந்து சிஎன்235 ரக இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட விமானம் புறப்பட்டது. சுமார் 8.40 மணியளவில் பாண்டாய் அசாம் ஜாவா அருகே அது அவசரமாகத் தரையிறங்கியது. இந்த மோதலில் விமானம் தீப் பிடித்து எரிந்து புகை மண்டலமாகக் காட்சியளித்தது. விமானத்தில் எட்டு பேர் பயணம் செய்ததாகவும் அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப் பட்டது.

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த மலேசிய ஆகாயப் படை, விபத்து குறித்து விசாரணை மேற் கொள்ளப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்கப்படும் என்றும் ஆகாயப்படை தெரிவித்தது. இதற்கிடையே விமானப் பயணி களைக் காப்பாற்றுவதற்காக உத விய மீனவர் ஒருவர் மூழ்கி விட் டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமாக உறுதிப் படுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு மலேசிய பிரதமர் நஜிப் உத்தர விட்டுள்ளார்.

 

கடற்கரையோரம் தரையிறங்கி விபத்துக்கு உள்ளான மலேசிய ஆகாயப் படை விமானம். இதில் விமானப் பயணிகளை மீட்ட கிராமவாசி ஒருவர் மூழ்கி விட்டதாகக் கூறப் படுகிறது. படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையத் தளம்