அம்னோவிலிருந்து முகைதின் இடைநீக்கம்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப்பெரிய அரசியல் கட்சியான அம்னோவிலிருந்து அதன் துணைத் தலைவர் முகைதின் யாசின் நேற்று அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார். இது, உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அடுத்த தேர்தல் வரை இந்த நிலை நீடிக் கும் என்றும் அம்னோ தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் துங் மன்சூர் நேற்று அறிவித்தார். அம்னோ தலைமையகத்தில் கூடிய உச்சமன்றத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துங்கு அட்னான், முகைதீன் இடைநீக்கம் செய்யப்பட்ட விவரத்தை வெளியிட்டார். ஆனால் முகைதினை இடை நீக்கம் செய்வது குறித்து உச்சமன்றம் முடிவு எடுப்பதற்கு முன் அம்னோ கட்சியின் பிரதமர் நஜிப் பும் துணைப் பிரதமர் அஹமட் சாஹித் ஹமிடியும் வெளியேறி விட்டனர்.

இருப்பினும் இந்த நடவடிக்கையில் திரு முகைதினின் அம்னோ பிரிவின் பதவியை பாதிக்காது என்றார் திரு துங்கு அட் னான். அம்னோவின் உதவித் தலைவரும் தற்காப்பு அமைச் சருமான ஹிஷாமுதின் தலைமையில் முன்னைய துணைப் பிரத மரான முகைதினை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது திரு முகைதின் மலேசியாவில் இல்லை என்று தெரிவிக்கப் பட்டது. கட்சியில் தமது பதவி ஊசலாடும் நிலையில் திரு முகை தின் வெளிநாடு சென்றுவிட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

‘த ஸ்டார் ஆன்லைன்’ தொடர்பு கொண்டபோது முகை தின் வெளிநாட்டில் இருப்பதை அவரது உதவியாளர்களில் ஒருவர் உறுதி செய்தார். ஆனால் அவர் எந்த நாட்டில் எவ்வளவு நாள் தங்கியிருப்பார் என்ற விவரங்கள் வெளியிடப்பட வில்லை. நேற்றுக் கூடிய அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் மற்றொரு உதவித் தலைவரான ஷஃப்பி அப்டால் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஜூலையில் மேற் கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் முகைதினோடு பதவியிலிருந்து அகற்றப்பட்டவர்களில் ஷஃப்பி அப்டாலும் ஒருவர்.

கோலாலம்பூரில் நேற்று அம்னோ தலைவர் திரு நஜிப் தலைமையில் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. அவரது பக்கத்தில் துணைத்தலைவர் முகைதின் யாசினின் இருக்கை காலியாகக் காணப்பட்டது. படம்: தி ஸ்டார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’