‘த மலேசியன் இன்சைடர் தலைமை ஆசிரியரை போலிஸ் விசாரிக்கும்’

கோலாலம்பூர்: மலேசியாவின் ‘த மலேசியன் இன்சைடர்’ இணையத் தளத்தின் தலைமை ஆசிரியர் ஜகபர் சாதிக், இதர துணை ஆசிரியர்கள், செய்தியாளர்களிடம் போலிஸ் விசாரணை நடத்தும் என்று தலைமை போலிஸ் ஆய் வாளர் காலிட் அபு பக்கர் நேற்றுத் தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தொடர்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப் பிட்டார்.

செய்தித் தளத்தின் கட்டுரை களால் ஆணையத்தின் மீது மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது என்றார் அவர். மலேசிய பிரதமர் நஜிப் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு போது மான ஆதாரங்கள் இருப்பதால் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறு வனத்திடம் நடத்தப்பட்ட விசார ணை ஆவணங்களை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகள் மறுபரிசீலனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாக செய்தித் தளம் தகவல் வெளியிட்டிருந்தது.

அன்று மாலையே தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கும் கட்டுரைகள் தொடர்பாக செய்தித் தளம் முடக்கப்பட்டதாக மலேசிய தகவல் தொடர்பு பல் லூடக ஆணையம் அறிவித்தது. ஆனால் அந்த செய்தித் தளம் புதிய பெயரில் செயல்படுவதாக ‘த ஸ்டார் ஆன்லைன்’ என்ற மற் றொரு இணையத்தளம் கூறியது. இதற்கிடையே வியாழன் இரவு செய்தித் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையிலிருந்து தாங்கள் விலகியிருக்க விரும்புவதாக குழுவின் இரண்டு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.