சிரியாவில் சண்டை நிறுத்தம்; சிறிது நேரத்தில் குண்டு வெடிப்பு

பெய்ரூட்: சிரியாவில் சண்டை நிறுத்தம் தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு கார் குண்டு வெடித்ததாகவும் அந்தக் குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்ததாக வும் சிரியா போராளிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கப் படையினரே தாக்குதல் நடத்தியதாக போராளி களின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் முதன் முறையாக சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்துள்ளது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து வகுத்த இந்த உடன்பாட்டை மதித்து நடப்பதாக சிரியா அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஆனால் அல்- -காய்தாவுடன் தொடர்புடைய நஸ்ரா முன்னணி மற்றும் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அரசாங்கம் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளதாக சிரியா போராளிகள் தரப்புக் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கப் படை யினர் தரைவழித் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அத் தாக்குதலில் தங்கள் தரப்பைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல் லப்பட்டதாகவும் போராளிகளின் பேச்சாளர் அகமது கூறினார்.

உள்நாட்டுச் சண்டையில் மோசமாக சீர்குலைந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு